- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் வழியில் களம் இறங்குகிறாரா ராகவா லாரன்ஸ்? - வரும் மே 1ம் தேதி காத்திருக்குது...

விஜய் வழியில் களம் இறங்குகிறாரா ராகவா லாரன்ஸ்? – வரும் மே 1ம் தேதி காத்திருக்குது தரமான சம்பவம், போடு வெடிய – சிஷ்யன் வெளியிட்ட தகவல்

- Advertisement -

நடிகர் ராகவா லாரன்ஸ், அமர்க்களம் படம் மூலம் காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா என்ற பாடல் காட்சி வாயிலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்தில் டான்ஸ் மாஸ்டராக அசத்திய அவர், தொடர்ந்து பார்த்தேன் ரசித்தேன் படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார். அடுத்து முனி படத்தில் ஹீரோவாக நடித்த லாரன்ஸ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

முனி படத்தின் தொடர்ச்சியாக காஞ்சனா 2, 3, மொட்ட சிவா கெட்ட சிவா, சிவலிங்கா, ருத்ரா என தொடர்ந்து வெற்றிப் படங்களை தந்த அவர், இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். அது மட்டுமின்றி மற்றவர்களுக்கு உதவுவதில் நடிகர் ராகவா லாரன்ஸ் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். கோடிக்கணக்கில் அவர் உதவிகளை செய்து வருகிறார்.

- Advertisement -

குறிப்பாக மாற்றுத்திறனாளி மாணவர்களை தன்னுடைய சொந்த செலவில் படிக்க வைக்கிறார் அவர்களுக்காக, ஆதரவற்றோர் இல்லம் துவங்கி அந்த குழந்தைகளை தங்களுடைய பராமரிப்பில் வைத்திருக்கிறார் ராகவா லாரன்ஸ். எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வியும் இருந்து வருகிறது ஏனெனில் அவர் மக்கள் மீது அக்கறை கொண்ட ஒரு நடிகராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீப காலமாக, மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாகி வருகிறார் கேபிஒய் பாலா. அவர் மற்றவர்களுக்கு உதவுவதில், நடிகர் ராகவா லாரன்ஸ் போலவே அதிக ஆர்வம் அக்கறையும் காட்டுவதால் தொடர்ந்து மக்கள் மத்தியில் அவர் ட்ரெண்டிங் ஆகி வருகிறார்.

- Advertisement -

சத்தியமங்கலம் பகுதி மலைவாழ் கிராம மக்களுக்கு ஐந்து ஆம்புலன்ஸ் வாகனங்கள், மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மூன்று சக்கர வாகனம், பெட்ரோல் பங்கில் பணிபுரியும் ஊழியருக்கு பைக் புது பைக், வறுமையில் வாடும் பெண்ணுக்கு ஆட்டோ இப்படி தொடர்ந்து மற்றவர்களுக்கு உதவுவதை மட்டுமே தனது லட்சியமாக கொண்டிருக்கும் பாலா இப்போது நடிகர் ராகவா லாரன்ஸ் உடன் சேர்ந்திருக்கிறார்.

இப்போது கேபிஒய் பாலா வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, என்னுடைய அண்ணன், ரோல்மாடல், குரு, வாழ்க்கை வழிகாட்டி ராகவா லாரன்ஸ், வருகிற மே ஒன்றாம் தேதி, மாற்றம் உங்கள் சேவை என்ற புதிய அமைப்பை தொடங்குகிறார். நீதி, நேர்மை, நியாயம், உண்மை இருக்கிற பக்கம் நிற்கிற நான், அதே குணங்களுடன் வாழும் அண்ணன் ராகவா லாரன்ஸ் பக்கம் நிற்கிறேன். இந்த அமைப்பில் நான் சேர்ந்து விட்டேன். அதேபோல் நீங்களும் சேர்ந்து விடுங்கள். உதவி கேட்கிற அனைவருக்கும் அந்த உதவிகள் சென்று சேர வேண்டும் என்பதுதான் இந்த அமைப்பின் நோக்கம் என்று அந்த வீடியோவில் கேபிஒய் பாலா அழைப்பு விடுத்திருக்கிறார். அந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/reel/C6G7jnLRikg/?igsh=ajdpdDYwbjhrbzh1

- Advertisement -

சற்று முன்