- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவர் என் மகனை போன்றவர், அவர் நன்றாக இருக்க வேண்டும், தேர்தல் பிரசாரத்தில் உருக்கமாக பேசிய...

அவர் என் மகனை போன்றவர், அவர் நன்றாக இருக்க வேண்டும், தேர்தல் பிரசாரத்தில் உருக்கமாக பேசிய நடிகை ராதிகா – சித்தி யாருக்கு ஓட்டு கேக்கறாங்க?

- Advertisement -

சமத்துவ மக்கள் கட்சி தலைவரான சரத்குமார், தேர்தல் நேரத்தில் மட்டுமே அரசியல் கட்சி தலைவராக திடீர் அவதாரம் எடுப்பார். சட்டசபை தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் வரும்போது மட்டுமே, கட்சிக்கரை வேட்டியை கட்டிக்கொண்டு, தேர்தல் களத்தில் காணப்படுவார். தேர்தல் முடிந்த பின், கருப்பு கூலிங்கிளாஸை மாட்டிக்கொண்டு ஜிம்முக்கு போவார். யாராவது அழைத்தால், ஷூட்டிங் போவார் என்பதுதான் பல ஆண்டுகளாக வழக்கம்.

இதற்கிடையே மேடைகளில் சீரியஸாக நினைத்துக்கொண்டு, வயிறு குலுங்கி சிரிக்கும் படியாக காமெடியாக பேசித் தள்ளுவார். இவர் யோசித்துதான் பேசுகிறாரா என அவரது கட்சியினரே யோசிக்கும் அளவுக்கு பேசுபவர்தான் சரத்குமார். ஏனெனில் அவர் பேசுகிற விதம் அப்படித்தான் இருக்கும். சமீபத்தில் 150 ஆண்டுகள் வரை நான் இதே ஆரோக்கியத்துடன் உயிர் வாழப் போகிறேன் என்றார்

- Advertisement -

அதே மேடையில், என் வயதான மாமியார், எப்போ மாப்பிள்ளை நீங்க சி.எம் ஆகப் போறீங்க என்று வருத்தமாக கேட்டுவிட்டார். அவர் அப்படி கேட்டவுடன் என்னால் வருத்தம் தாங்க முடியவில்லை. அதனால் நான் 2026ம் ஆண்டில் முதலமைச்சராகி விடுவேன். அதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டேன் என்றார். இவர் பேச்சை கேட்டுவிட்டு அவரது கட்சி தொண்டர்களும், ரசிகர்களும் அழுவதா, சிரிப்பதா என்று நொந்து போய் விட்டனர்.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக சில வாரங்களுக்கு முன், பாஜகவில் கூட்டணி சேருவது குறித்து நள்ளிரவு 2 மணிக்கு ராதிகாவை எழுப்பிக் கேட்டேன் என்று கூறி, அதிலும் சர்ச்சையை கிளப்பினார். நைட் 2 மணிக்கா, கூட்டணி குறித்து பேசுவார் என கலாய்த்தனர். இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல இரு தினங்களுக்கு முன் இன்னொரு காமெடி செய்திருந்தார் நடிகர் மற்றும் சமக தலைவர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்.

- Advertisement -

அதாவது, சூரியவம்சம் படத்தில் தேவயானியை கலெக்டர் ஆக்கியது போல, விருதுநகர் தொகுதிக்கு என் மனைவி ராதிகாவை எம்பி ஆக்குவேன் என்று வீரவசனம் பேசியிருக்கிறார். தேவயானி எந்த மாவட்ட கலெக்டருன்னு கொஞ்சம் சொல்றீங்களா சின்ராசு என நெட்டிசன்கள் பங்கம் செய்து கலாய்த்து வருகின்றனர்.

நடிகை ராதிகா போட்டியிடும் அதே தொகுதியில், தேமுதிக வேட்பாளராக விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் போட்டியிடுகிறார். இதுகுறித்து தேர்தல் பிரசாரத்தில் பேசிய நடிகை ராதிகா, விஜயபிரபாகரன் என் மகளுடன் படித்தவர். விஜயகாந்தின் மகன், எனக்கும் மகன் போன்றவர்தான். அவர் நன்றாக இருக்க வேண்டும் என்றும் பேசியிருக்கிறார். இவர் தனக்கு ஓட்டு கேட்கிறாரா, விஜயபிரபாகரனுக்கு ஓட்டு கேட்கிறாரா என அங்குள்ள மக்கள் குழம்பி போயுள்ளனர்.

- Advertisement -

சற்று முன்