நடிகர் அஜித் குமார் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் உடன் இணைந்து இருக்கிறார். இவர் ஏற்கனவே திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பஹிரா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.
இவர் மேற்கொண்ட பார்வை திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்போது, அஜித்துடன் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பழகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தனது படத்திற்கான கதையை கூறி ஓகே வாங்கி இருக்கிறார் ஆதிக்.
தொடர்ந்து மார்க் ஆண்டனி என்னும் திரைப்படத்தை அவர் இயக்கினார். இது திரைப்படத்தை இயக்கக் கூடியதும் அஜித் தான் என்று ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்கள். முதலில் ஒரு பெரிய படத்தை எடுத்து முடியுங்கள் அதன் பிறகு நாம் இணையலாம் என்று அஜித் கூறியதாக அவர் தெரிவித்து இருந்தார்.
அதேபோல் அவர் மார்க் ஆண்டனி திரைப்படத்தை எடுக்க, அதுவும் பட்டித்தொட்டி என்றும் ஹிட் அடித்தது. மிகவும் சிக்கலான, டைம் டிராவல் கதையை கையில் எடுத்த ஆதிக் அதனை எந்தவித சிக்கலும் இல்லாமல் சொல்லி இருந்தார். படத்தின் வெற்றிக்கு, எஸ் ஜே சூர்யாவும் உறுதுணையாக இருந்தார். அவரது நடிப்பு ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்தது.
இப்படியான சூழலில் தான் அஜித்தின் அடுத்த திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் கையில் போயிருக்கிறது. இதற்கு குட் பேட் அக்லி என பெயர் வைத்திருக்கிறார்கள். இதனை தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவிஸ் நிறுவனம் எடுக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். இவர் ஏற்கனவே வீரம் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
ஜூன் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், வரும் பொங்கலுக்கு இது ரிலீஸ் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பை ஜப்பான் நாட்டில் எடுக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்த திரைப்படம் அறிவியலை மையப்படுத்தி எடுக்கப் போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், அஜித் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்க போவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. படத்தில் நடிக்கும் மற்ற கதாபாத்திரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





