- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் படத்துக்கு வில்லனாக மாறினாரா லியோ பட தயாரிப்பாளர்? - திடீரென குறுக்கில் பாய்வதால்...

விஜய் படத்துக்கு வில்லனாக மாறினாரா லியோ பட தயாரிப்பாளர்? – திடீரென குறுக்கில் பாய்வதால் விஜய் ரசிகர்கள் கோபம்

- Advertisement -

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படப்பிடிப்பு, இப்போது திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. இங்கு ஷூட்டிங்கை முடித்த பிறகு, அடுத்த மாதம் படக்குழு ரஷ்யா செல்கிறது. அங்கு 16 நாட்கள் நடத்தப்படும் படப்பிடிப்புடன் இந்த படம் நிறைவடைய உள்ளது. அதன்பிறகு போஸ்ட் புரடக்சன் பணிகள் நடக்கின்றன.

டபுள் ரோலில் விஜய் நடித்துள்ள இந்த படத்தில் சினேகா, மீனாட்சி சவுத்ரி என 2 கதாநாயகிகள் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் டாப் ஸ்டார் பிரசாந்த் நடிப்பது அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. 1980களில் வெள்ளிவிழா நாயகனாக தமிழ் சினிமாவில் கலக்கிய மைக் மோகன், இந்த படத்தின் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுக்கிறார். அதுவும் வில்லன் கேரக்டரில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

நடிகர் விஜயின் இந்த படத்துக்கு முந்தைய படம் லியோ. டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தில் விஜய், திரிஷா, மிஷ்கின், சஞ்சய்தத், அர்ஜூன், கவுதம் மேனன், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இந்த படம் விமர்சன ரீதியாக தோல்வியடைந்தாலும், வசூல் ரீதியாக ரூ. 600 கோடி வரை வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை தயாரித்தவர் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ எஸ்எஸ் லலித்குமார். நடிகர் விஜயின் நெருங்கிய நண்பர்தான் இவர். லலித்குமார், விஜயின் பினாமி என்று ஒரு தகவலும் இருந்து வருகிறது. லியோ படத்தை தயாரித்த வகையில், மிகப்பெரிய லாபமடைந்தவர்களில் மிக முக்கியமானவர் தயாரிப்பாளர் எஸ் எஸ் லலித்குமார்.

- Advertisement -

இப்போது அவர் எல்ஐசி என்ற படத்தை தயாரித்து வருகிறார். டைரக்டர் விக்‌னேஷ் சிவன் இயக்கும் இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கிறார். சீமான், மிஷ்கின், எஸ்ஜே சூர்யாவும் இந்த படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. எல்ஐசி படத்தின் ஷூட்டிங் சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் எடுக்கப்பட்ட நிலையில், இப்போது சென்னையில் திருவான்மியூரில் ஷூட்டில் நடப்பதாக கூறப்படுகிறது.

எல்ஐசி படத்தின் டீசர் வரும் ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விஜய் நடித்துள்ள கோட் படத்தில் பர்ஸ்ட் சிங்கிள் அன்றுதான் வெளியாகிறது. இப்படி மாஸ் ஹீரோ விஜய் படத்தின் பிரமோவுக்காக பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும்போது, அவரது நண்பரான எஸ்எஸ் லலித்குமார் இப்படி குறுக்கே வரலாமா, கோட் படத்துக்கு போட்டியாக எல்ஐசி படத்தின் பிரமோ அதே நாளில் வரலாமா, என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், இந்த நாளில் ரஜினி 171 குறித்த சில அப்டேட்டுகளை வெளியிட இருந்த டைரக்டர் லோகேஷ் கனகராஜ், விஜய் பட அப்டேட் விவரம் தெரிந்தவுடன் ரஜினி குறித்த அப்டேட்டுகளை ஒருவாரம் தள்ளி வைத்துள்ளார் என்ற தகவலும் இப்போது வைரலாகி வருகிறது. லியோ பட இயக்குனர் இப்படி நடந்துக்கொள்ளும் போது, தயாரிப்பாளர் விஜய்க்கு எதிராக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்