கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் தக்லைப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது.
படத்தின் சில காட்சிகள் செர்பியா நாட்டில் படமாக்கப்பட்டன. இப்படியான சூழலில் தேர்தல் காரணமாக படத்தின் சூட்டிங் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக இருக்கும் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரைக்கு செல்வதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இப்படியான சூழலில், படத்தில் இடம்பெற்றுள்ள துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு பணிகள் தள்ளிப் போவதாலும், இரண்டு நடிகர்களும் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படியான சூழலில் துல்கர் சல்மானுக்கு பதில் சிம்புவின் நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. இதில் நடிப்பதற்கு தற்போது சிம்பு சம்மதம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதேபோல் ஜெயம் ரவிக்கு பதில் நடிகர்களையும் படக்குழு தேடி வந்தது.
முதலில் இதில் நிவின்பாலி நடிப்பதாக கூறப்பட்டது. அதேபோல் அரவிந்த்சாமி இடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்ததாக தெரிகிறது. ஆனால் தற்போது இந்த இரண்டு நடிகர்களும் படத்தில் இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு பதில் அருண் விஜய் இடம் பேச்சுவார்த்தை நடைபெற்று அது சுமூகமாக முடிந்திருப்பதாக சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஏற்கனவே மணிரத்னத்தின் செக்கச்சிவந்த வானம் திரைப்படத்தில் அருண் விஜய் நடித்திருப்பார். இப்படியான சூழலில், தக் லைப் படத்தில் அவர் இடம்பெற ஒப்புக் கொண்டிருப்பதாகவும், தமிழ் புத்தாண்டு இதன் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, நாசர், கௌதம் கார்த்திக் உள்ளிட்டார் நடிப்பது குறிப்பிடத்தக்கது.





