- Advertisement -
Homeபொழுதுபோக்குநல்ல படம் பார்க்க வாங்கன்னு அழைத்தேன், அப்போ எனக்கு எம்ஜிஆர் சொன்ன அட்வைஸ் அதுதான் -...

நல்ல படம் பார்க்க வாங்கன்னு அழைத்தேன், அப்போ எனக்கு எம்ஜிஆர் சொன்ன அட்வைஸ் அதுதான் – நடிகர் கமல்ஹாசன் சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் 5 வயதில் களத்தூர் கண்ணம்மா என்ற படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடித்தவர் கமல்ஹாசன். இதில் ஜெமினி கணேசன் சாவித்திரி நடித்திருந்தனர். அதன்பிறகு பார்த்தால் பசி தீரும் என்ற சிவாஜி கணேசன் படத்திலும் அடுத்து ஆனந்த ஜோதி என்ற படத்தில் எம்ஜிருஆருடன் கமல் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

அதன்பிறகு கே பாலசந்தர் இயக்கத்தில் அரங்கேற்றம் படத்தில் இளம் வாலிபனாக நடித்த கமல்ஹாசன் தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறினார். ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக கமல்ஹாசனும் அவரை போலவே நடிகர் ரஜினிகாந்தும் உச்சத்தை தொட்டனர்.

- Advertisement -

இப்போது நடிகர் கமல்ஹாசன் தனது பயணத்தில் 67வது சினிமா ஆண்டிலும் நடிகர் ரஜினிகாந்த் தனது பயணத்தில் 51வது சினிமா ஆண்டிலும் பயணித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் அன்றைய திரை ஜாம்பவான்களான எம்ஜிஆர் சிவாஜி கணேசன் இருவருக்கும் மிகவும் பிரியமான ஒருவராக இருந்தார்.

அதனால் எம்ஜிஆர் முதல்வராக இருந்த போதும் கமல்ஹாசன் மீது அதிக அன்பு காட்டினார். அதே போல் நடிகர் சிவாஜி கணேசன் கமலை அடிக்கடி வீட்டுக்கு அழைத்து கமலை சந்தித்து பேசுவார். தேவர் மகன் படத்தில் சிவாஜியை தனக்கு அப்பாவாக நடிக்க வைத்து கமல்ஹாசனும் அழகு பார்த்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது, எம்ஜிஆர் அவர்கள் முதல்வராக இருந்த போது அவரிடம் நான் பேசும் போது, அண்ணே நீங்க முதல்வர் ஆயிட்டீங்க. டைம் இருக்காது. நான் நடிச்ச நல்ல படங்கள் வரும்போது சொல்றேன். நீங்க பார்க்க வாங்கன்னு சொன்னேன். ஓஹோ அப்போ நல்லா இல்லாத படங்களும் செய்றியா? ஏன் செய்றேன்னு கேட்டார்.

எல்லாரும் உங்களை மாதிரி பண்ண முடியுங்களா? எல்லா படத்தையும் கூர்ந்து கவனிக்க முடியாது. வர்றதை வாங்கி போட்டுக்க வேண்டியதுதான் என்றேன். அப்படி செய்யாதே, உங்களை மாதிரின்னு சொல்லாதே. நான் ஏறுன படியில நீ ஏறிட்டு இருந்தேன்னா அதே எடத்துல இருப்பே. நீ கட்டி வெச்சிட்டேன் படி. நீ அதுல ஏறி அடுத்த படிக்கு போகணும் என்றார். அந்த வரவேற்பும் வாழ்த்தும்தான் எனக்கு உத்வேகம் தந்தது என்று நடிகர் கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்