- Advertisement -
Homeபொழுதுபோக்குநீங்க கோடிக்கணக்குல சம்பாதிங்க, ஆனா எங்க சோத்துல மண்ணை போடாதீங்க - இயக்குனர் ஆர்ஜே பாலாஜியை...

நீங்க கோடிக்கணக்குல சம்பாதிங்க, ஆனா எங்க சோத்துல மண்ணை போடாதீங்க – இயக்குனர் ஆர்ஜே பாலாஜியை விமர்சித்த நடிகர் மன்சூர் அலிகான்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் நடனக்குழு கலைஞராக இருந்தவர் மன்சூர் அலிகான். பிறகு பல படங்களில் அடியாட்களில் ஒருவராக சண்டைக்காட்சிகளில் நடித்திருக்கிறார். மன்சூர் அலிகானின் நடிப்பு திறமையை பார்த்து தனது 100வது படம் கேப்டன் பிரபாகரன் படத்தில் வீரபத்ரன் என்ற கேரக்டரில் அவரை வில்லனாக நடிக்க வைத்தவர் கேப்டன் விஜயகாந்த்.

இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது மட்டுமின்றி நடிகர் மன்சூர் அலிகானுக்கு மிகப்பெரிய வரவேற்பை அடையாளத்தை பெற்றுத் தந்தது. தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் மன்சூர் அலிகான் வில்லனாக நடித்திருந்தார். பிறகு பல படங்களில் சிறுசிறு வேடங்களிலும்
நடித்தார்.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிகை திரிஷா உள்ளிட்டோர் நடித்த கருப்பு படத்தில் மன்சூர் அலிகான் வக்கீலாக நடித்திருந்தார். ஆனால் படத்தில் அவருக்கு பெரிய அளவில் காட்சிகள் இல்லை. கூட்டத்தில் ஒருவராக தான் நிற்க வைக்கப்பட்டு இருந்தார். அவருக்கு வசனங்களும் காட்சிகளும் பெரிதாக இருக்கவில்லை.

இதுகுறித்து சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான் கூறியதாவது, கருப்பு படத்துல நான் நடிச்சேன். அதுல நாங்க நாலு பேரு எங்களுக்கு பயமே கிடையாது அப்படிங்கற பாட்டுல நான் டான்ஸ் ஆடி நடித்திருந்தேன். நல்லா டான்ஸ் ஆடி இருந்தேன். ஆனா படத்துல அந்த பாட்டை தூக்கிட்டாங்க.

- Advertisement -

நீங்க கோடிக்கணக்குல பணம் சம்பாதிங்க. ஆனா ஒரு நடிகனோட நடிப்பை போற்றுங்க. உங்களுக்கு உண்மையான தைரியம் இருந்தால் அதை படத்துல போடுங்க. ஆர்ஜே பாலாஜி ஹீரோவுக்கு 1500 ஷாட் பில்டப் கொடுக்குறீங்க. என்னை டம்மியா நிக்க வச்சு இருக்கீங்க?

நூற்றுக்கணக்கான டெக்னீசியன்கள் உழைப்புல தான் எல்லா ஹீரோவும் பில்டப்ல வாழ்ந்துட்டு இருக்காங்க. நீங்க கோடிக்கணக்கில் சம்பாதிங்க. ஆனா அடுத்தவன் சோத்துல மண்ணை போடாதீங்க என்று நடிகர் மன்சூர் அலிகான் ஆவேசமாக பேசி இருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்