நடிகர் விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராகி விட்டார். அரசியல்வாதியாக அவரை மக்கள் ஏற்றுக்கொண்டார்களா, இல்லையா என்பதை வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் சொல்லி விடும். அதே நேரத்தில் 2024, 2025 ஆகிய 2 ஆண்டுகளில் மக்களை தன் பக்கம் இழுப்பதற்கான அத்தனை விஷயங்களையும் விஜய் செய்தாக வேண்டும். ஏனெனில் வரும் தேர்தலில் கடும் சவால்கள் விஜய்க்கு காத்திருக்கின்றன.
திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற கழகம் இரண்டுமே, தமிழகத்தை பலமுைற ஆட்சி செய்த கட்சிகளாக இருக்கின்றன. ஆனால் எம்ஜிஆர் ஆட்சியில் மக்களுக்கு கிடைத்த நன்மைகளை, திருப்தியை அதற்கு பின் வந்த ஜெயலலிதாவும் தரவில்லை. எடப்பாடி பழனிச்சாமியும் தரவில்லை.
அதே போல் விஞ்ஞான ஊழலில் தலை சிறந்த கருணாநிதியின் ஆட்சியும் மக்களுக்கு பலத்த அதிருப்தியை தான் தந்தது. இப்போது அவரது மகன் ஸ்டாலினும், மக்களை ஏமாற்றிய ஒரு ஆட்சியை தான் தந்துக் கொண்டு இருக்கிறார். மாதம் ஆயிரம் ரூபாய் அனைத்து இல்லத்தரசிகளுக்கும் தருவதாக வாக்குறுதி தந்து விட்டு, பின் தகுதியான இல்லத்தரசிகள் என ஒரு புதிய வார்த்தையை சேர்த்து, பெண்களை வஞ்சித்து விட்டார்.
இப்படி மக்களை அதிருப்தியடைய செய்த, ஏமாற்றிய திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக அரசியல் வரவாக விஜய் வருவதை, தமிழக மக்களில் பலரும் நல்ல ஒரு விஷயமாகவே வரவேற்கின்றனர். புதியவர் கையில் ஒருமுறை ஆட்சியை ஒப்படைப்போம். அடுத்த 5 ஆண்டுகளில் அவர் என்னதான் செய்கிறார் என்று வாய்ப்பு கொடுத்தால்தானே தெரியும் என்று வெளிப்படையாகவே பேச ஆரம்பித்து விட்டனர்.
இந்நிலையில் விஜய் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறார். இப்போது கோட் படம் ஷூட்டிங்கில் இருக்கும் விஜய், ரஷ்யாவில் 16 நாட்கள் நடக்கும் ஷூட்டிங்கில் பங்கேற்று, அந்த படத்தை அங்கு நிறைவு செய்கிறார். தனது 68வது படத்தை முடித்து விடும் விஜய், அடுத்து தனது 69வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை தீரன் அதிகாரம் 1, வலிமை, துணிவு படங்களை இயக்கிய எச் வினோத் தான் டைரக்ட் செய்கிறார்.
வரும் ஜூன் மாதம் 22ம் தேதி, விஜய் பிறந்த நாள் அன்று இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்குகிறது. அன்று முதல் ஆறு மாதேங்களில் அதாவது டிசம்பர் மாத இறுதிக்குள் இந்த படப்பிடிப்பை முடித்துவிட வேண்டும் என்று விஜய் திட்டவட்டமாக எச். வினோத்திடம் கூறி விட்டார். அதன்பிறகு 2025ல் மே அல்லது ஜூன் மாதம் இந்த படம் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளது. 2025 துவக்கத்தில் இருந்தே முழுக்க முழுக்க அரசியல் பணிகளில் மட்டுமே தீவிர கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார் டிவிகே தலைவர் விஜய்.





