தமிழ் சினிமாவில் தற்போதைய ஹாட் டாபிக் என்னவென்றால், அது ஜெயிலர் படம் பற்றிய தகவலாகதான் இருக்கும். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் ரஜினி படங்களே ரிலீசாகாமல் இருக்கும் சூழலில், வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் வெளியாகிறது. அண்ணாத்த பட தோல்விக்கு பிறகு, பலரிடம் கதை கேட்ட ரஜினிகாந்த் இறுதியாக நெல்சனை தேர்வு செய்தார்.

இதை தொடர்ந்து சூட்டிங் பணிகள் ஆரம்பிக்க, முத்துவேல் பாண்டியன் என்னும் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். இதுபோக தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில் குமார், கன்னட பிரபலம் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில் ஆகிய வரும் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளனர். அனிருத் இசையில் ஜெயிலர் படத்தின் பாடல்கள் உருவாகியுள்ளது. படத்தில் வில்லனாக சிவராஜ்குமார் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சமீபத்தில் ஜெயிலரில் இருந்து காவாலயா, டைகர்கா ஹுக்கும், ஜூஜூபி ஆகிய பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகின. இதில், காவாலயா பாடல் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் ரீச் ஆகியது. பலருக்கும் தமன்னாவின் எடுப்பான நடன அசைவுகள் பிடித்து போக, தாங்களும் அதேபோல் நடனமாடி செல்போனில் வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர்.
டைகர் கா ஹுக்கும் பாடலும் நல்ல வரவேற்பை பெற்று ஜெயிலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற செய்தது. குறிப்பாக பாடலில் இடம்பெற்ற பெரும்பாலான வரிகள், ரஜினி ரசிகர்களைக் கொண்டாட வைத்தன. இருப்பினும் சூப்பர் ஸ்டார் பட்டம் தொடர்பாக எழுதப்பட்ட வரிகள் சர்ச்சையை கிளப்பியது.
இது ஒரு புறம் இருக்க, படத்தில் தமன்னா கதாபாத்திரம் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது ஜெயிலரில் அவர், தெலுங்கு கதாநாயகி கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். இதற்காகத்தான் அவருக்கு காவாலையா பாடலை வைத்திருக்கிறார்களா என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். படத்தில் அவருக்கு சில நிமிடங்கள்தான் காட்சி இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜெயிலர் டிரைலர் அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





