- Advertisement -
Homeபொழுதுபோக்குநினைச்சது ஒண்ணு, நடந்தது ஒண்ணு; அஜீத்குமாருக்கு இப்படி ஒரு சோதனையா? கார் விபத்து வீடியோ செய்த...

நினைச்சது ஒண்ணு, நடந்தது ஒண்ணு; அஜீத்குமாருக்கு இப்படி ஒரு சோதனையா? கார் விபத்து வீடியோ செய்த அலப்பரையை பாருங்க!

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடித்து வரும் படம் விடாமுயற்சி. இந்த படத்தின் ஷூட்டிங், கடந்த அக்டோபர் மாதம் துவங்கியது. ஆனால் ஆறு மாதங்களாகியும் இன்னும் முடியவில்லை. தொடர்ந்து பனிமழை, மணல் புயல், கடும் குளிர் உள்ளிட்ட பாதிப்புகளால் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடக்கவில்லை. இதனால் அடிக்கடி ஷூட்டிங் பிரேக்கப் ஆனது.

ரஜினி நடிக்கும் வேட்டையன், கமல் நடிக்கும் இந்தியன் படம், அஜீத் நடிக்கும் விடாமுயற்சி என 3 படங்களை ஒரே நேரத்தில் தயாரித்து வரும் லைகா புரடக்சன் தயாரிப்பு நிறுவனத்துக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால் விடாமுயற்சி படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி விட்டனர். கடந்த 2 மாதங்களாக படப்பிடிப்பே நடக்கவில்லை. அஜீத்குமார் சென்னையில் இருக்கிறார்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன், இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் பிறந்த நாள் விழாவில் பங்கேற்றார் அஜீத்குமார். அவருக்கு அஜீத் கேக் ஊட்டி விட, பதிலுக்கு அவர் ஊட்டி விட அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும், கடைசியாக 2023ம் ஆண்டில் அஜீத்குமார் நடித்த துணிவு படம் வந்தது. இப்போது ஓராண்டுக்கு மேலாகியும் அவரது அடுத்த படமும் வரவில்லை. விடாமுயற்சி படப்பிடிப்பும் அப்படியே நின்று போய் விட்டது. இந்த மோசமான நிலையில் இவருக்கு இந்த கொண்டாட்டம் எல்லாம் தேவையா என, சமூக வலைதளங்களில் பலரும் கடுமையாக விமர்சிக்க துவங்கி விட்டனர்.

இதையடுத்துதான், நவம்பர் மாதம் நடந்த அந்த கார் விபத்து வீடியோவை, தனது மேனேஜர் சுரேஷ் சந்திரா மூலம் வெளியிடச் செய்திருக்கிறார் அஜீத்குமார். தன்னை ஏனோதானோ என நினைக்கும் ரசிகர்களுக்கு, நான் உயிரை பணையமாக வைத்து, விடாமுயற்சி படப்பிடிப்பில் எப்படி கார் ஓட்டி விபத்தில் சிக்கி இருக்கிறேன் பாருங்கள் என்பதுதான் வெளியான அந்த வீடியோவில் இருந்து அஜீத்குமாரின் நோக்கமாக இருந்தது.

ஆனால் அதுவும் இப்போது வேறுமாதிரியாக அஜீத்குமாருக்கு நெகட்டிவ் ஆக தான் மாறி இருக்கிறது. உங்களுக்கு கார் ஓட்டத் தெரியுமா, தெரியாதா. இப்படியா மோசமா கார் ஓட்டுவாங்க என்ற விமர்சித்த ரசிகர்கள், காருக்குள் ஆரவ் என்ற மற்றொரு சக நடிகர் இருக்கிறார். அவரது உயிர், குடும்பம் குறித்து யோசித்தீர்களா, இனிமேல் உங்கள் சர்க்கஸை காட்ட தனியாக கார் ஓட்டுங்கள். மற்றவர் உயிருடன் விளையாடாதீர்கள் என்றும் திட்டி வருகின்றனர்.

சற்று முன்