- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் சூர்யாவுக்கும் சம்பளம் இல்லே, டைரக்டர் கார்த்திக் சுப்பராஜூக்கும் சம்பளம் இல்லே - சூர்யா 44...

நடிகர் சூர்யாவுக்கும் சம்பளம் இல்லே, டைரக்டர் கார்த்திக் சுப்பராஜூக்கும் சம்பளம் இல்லே – சூர்யா 44 படத்தில் இப்படி ஒரு உள்குத்து விஷயம் நடக்குதா?

- Advertisement -

நடிகர் சூர்யா, மூன்று முக்கிய படங்களில் நடிக்கும் அற்புதமான வாய்ப்பை தவற விட்டிருக்கிறார். அதுவும் அவரே விரும்பி அந்த படங்களில் நடிக்க முடியாது எனவும் வெளியேறி இருக்கிறார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பலத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அந்த படங்களில் அவர் நடித்திருந்தால், அவரது வளர்ச்சி அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்திருக்கும்.

குறிப்பாக வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிப்பதில் இருந்து சூர்யா விலகி இருக்கிறார். இயக்குனர் வெற்றிமாறன் இந்திய அளவில் மதிக்கப்படும் முக்கிய இயக்குனராக, அற்புத படைப்பாளியாக இருக்கிறார். அவரது இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடித்திருந்தால் சூர்யாவுக்கு சினிமா துறையில் வேறு மாதிரியான மரியாதைகள் கிடைத்திருக்கும்.

- Advertisement -

நந்தா மற்றும் பிதாமகன் படங்கள் மூலம் சூர்யாவுக்கு மிகப்பெரிய திரைப்பட நாயகன் அந்தஸ்தை ஏற்படுத்தி தந்தவர்தான் இயக்குனர் பாலா. அவரது இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடிக்க கமிட் ஆகி, ஏறக்குறைய ஒரு மாதம் வரை நடித்துவிட்டு, பிறகு ஈகோ பிரச்னை காரணமாக அந்த படத்தையும் விட்டு விலகினார் நடிகர் சூர்யா.

அதுமட்டுமின்றி தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்த சூர்யாவுக்கு, சூரரைப் போற்று படம் மூலம் கம்பேக் கொடுத்தவர் இயக்குனர் சுதா கொங்காரா. அவரது இயக்கத்தில் புறநானூறு படத்தில் கமிட் ஆன சூர்யா, ஒரு கட்டத்தில் கதையை மாற்றுங்க, ஸ்கிரிப்ட்டை மாற்றுங்க என இயக்குனரையே டார்ச்சர் செய்ததால், இந்த படமே இப்போதைக்கு வேண்டாம் என சுதா கொங்காரா முடிவுக்கு வர, அந்த படமும் பிரேக் ஆகி விட்டது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது டைரக்டர் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் 44வது படம் குறித்து அறிவிப்பு 2 வாரங்களுக்கு முன் வெளியானது. இந்த படத்தில் நடிக்க சூர்யாவுக்கு சம்பளம் இல்லை. அதே போல் டைரக்டர் கார்த்திக் சுப்பராஜூக்கும் சம்பளம் இல்லை என்று பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால் உண்மையில் இதற்கு பின்னணியில் உள்ள உள்குத்து இப்போது தெரிய வந்துள்ளது.

சூர்யா நடிக்கும் 44வது படத்தை சூர்யாவின் சொந்த படத்தயாரிப்பு நிறுவனமும், டைரக்டர் கார்த்திக் சுப்பராஜின் சொந்த படத்தயாரிப்பு நிறுவனமும் இணைந்துதான் தயாரிக்கிறது. அதனால் இந்த படத்தை வெளியிட்ட பின், அதில் வரும் மொத்த பிராபர்ட்டி ஷேரையும் இரண்டாக பிரித்துக்கொள்ள இருவரும் திட்டமிட்டுள்ளதால், சம்பளம் இல்லாமல் மொத்தமாக அள்ளிக்கொள்ள முடிவு செய்துள்ளனர். இது தெரியாமல் பலரும் சம்பளம் இல்லாமல் சூர்யா நடிக்கிறாரா என ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்