- Advertisement -
Homeபொழுதுபோக்குஉலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு இப்படி ஒரு அவலமான நிலையா- வெளிச்சத்துக்கு வந்த பல உண்மைகள்...

உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு இப்படி ஒரு அவலமான நிலையா- வெளிச்சத்துக்கு வந்த பல உண்மைகள் – அமிதாப் பச்சனும் கண்டுக்கலையாமே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் இன்னும் ஐஸ்வர்யா ராய்க்கு முதல்நிலை கதாநாயகியாக நடிக்கு வாய்ப்பு தரப்படுகிறது. பொன்னியின் செல்வன் படத்தில் மணிரத்னம் அவருக்கு நந்தினி என்ற முக்கிய கேரக்டரில் நடிக்க வாய்ப்பு அளித்திருந்தார். இருவர், ராவணன் உள்ளிட்ட படங்களில் ஏற்கனவே ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். ஷங்கர் இயக்கத்தில் ஜீன்ஸ், ராஜீவ் மேனன் இயக்கத்தில் கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன், ரோபோ படங்களிலும் ஐஸ்வர்யா ராயை ரசிகர்கள் விரும்பி ரசித்தனர்.

கடந்த 1994ம் ஆண்டில் நடந்த அழகி போட்டியில் உலக அழகியாக வெற்றி பெற்றவர் ஐஸ்வர்யா ராய். அந்த புகழின் வௌிச்சத்தில் முதலில் விளம்பரங்களில் நடித்தவர் பின்பு இந்தி மற்றும் தமிழ் படங்களில் நடிக்க துவங்கினார். இடையே சிலருடன் காதல் கிசுகிசுக்களிலும் சிக்கியவர், 2007ம் ஆண்டில் அமிதாப் பச்சன் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துக்கொண்டார்.

திருமணத்துக்கு பிறகும் படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராய், தமிழில் சமீபத்தில் பொன்னியின் செல்வன் பாகம் 1 மற்றும் 2ல் சிறப்பாக நடித்திருந்தார். அவருக்கு தமிழில், இந்தியில் நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தாலும் நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து மட்டுமே நடிக்கிறார். அதுவும் முக்கியத்துவம் தரும் கதைக்கருவாக இருந்தால் மட்டுமே கால்ஷீட் தருகிறார்.

அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய்க்கு 2011ம் ஆண்டில் மகளாக பிறந்தவர் ஆராதயா பச்சன். கணவன், மனைவி, குழந்தை என சந்தோஷமாக வாழ்ந்த அவர்களது வாழ்விலும் அவ்வப்போது பிரச்னைகள் எழுந்திருக்கின்றன. குறிப்பாக ஐஸ்வர்யா ராயின் அளவுக்கு அதிகமான புகழ் வெளிச்சம் அபிஷேக் பச்சனை வெறுப்பேற்றியுள்ளது.

குறிப்பாக ஜெயாபச்சன், ஐஸ்வர்யா ராயை மீடியாக்கள் முன்னிலையில் பலமுறை அவமதித்துள்ளார். மாமியார் – மருமகள் சண்டை வெட்ட வெளிச்சமான நிலையில், ஒரு கட்டத்தில் தனிக்குடித்தனம் போய் விடலாம் என்ற முடிவுக்கு ஐஸ்வர்யா ராய் வந்துள்ளார். ஆனால் அதற்கு அபிஷேக் பச்சன் சம்மதிக்கவில்லை. என் அப்பா, அம்மாவை விட்டு தனியாக வர முடியாது என மறுத்து விட்டார்.

சமீபத்தில், அபிஷேக் பச்சனின் கைவிரலில் அணிந்திருந்த நிச்சயதார்த்த மோதிரத்தை காணவில்லை. அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராயை பிரிந்துவிட்டாரா என எழுதி பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் இருவரும் ஒரே வீட்டில்தான் வாழ்ந்தாலும், தனித்தனி உலகமாக வாழ்கின்றனர். மகள் ஆராதயா எதிர்காலம் கருதி, பிரிந்து தனித்தனியாக செல்லாமல், ஒரே வீட்டில் அவர்கள் இருவரும் பிரிந்துவாழும் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

சற்று முன்