- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடடே இந்தியன் 2 படத்தில் இந்த நடிகை இருக்காங்களா... சரியான இடத்தில் செக் வச்சாருயா இயக்குனர்...

அடடே இந்தியன் 2 படத்தில் இந்த நடிகை இருக்காங்களா… சரியான இடத்தில் செக் வச்சாருயா இயக்குனர் ஷங்கரு…

- Advertisement -

இந்திய சினிமாவில் தற்போது பிரம்மாண்டமாக திரைப்படத்தை இயக்கும் இயக்குனர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகலாம். ஆனால் இதற்கு விதை போட்டவர் யார் என்றால் நிச்சயம் அது இயக்குனர் சங்கரை தான் கூற வேண்டும். பொறுமைக்கு மறு உதாரணமாக இருக்கும் இயக்குனர் சங்கர், தனது திரைப்படங்களில் பிரம்மாண்டத்துக்காக அவ்வளவு மெனக்கெடுவார்.

காட்சிக்கு காட்சி அவர் கொடுக்கும் பிரம்மாண்டமும், அதற்காக அவர் மேற்கொள்ளும் யுக்தியும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. ஜென்டில்மேன் திரைப்படத்தில் தொடங்கி, காதலன் இந்தியன் முதல்வன் என ஒவ்வொரு திரைப்படங்களிலும் அவரது பிரம்மாண்டம் தொடர்ந்து கொண்டே இருந்தது.

இது ஒரு புறம் இருக்க சங்கரின் மேல் சர்ச்சையும் கிளம்பியது. அவர் திரைப்படத்தின் காட்சிகளுக்கு எல்லாம் மெனக்கிடுவது இல்லை என்றும், வெறும் பாடலுக்கு மட்டும் தான் அவர் காசை செலவு செய்வதாகவும் பலர் இங்கு கூறி வந்தனர். அது ஓரளவு நிதர்சனம் என்பது போலவே அந்நியன் உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் செயல்பட்டார்.

குறிப்பாக ஐ திரைப்படத்தில் அவர் பாடலுக்காக தயாரிப்பாளரின் காசில் இருந்து கோடி கோடியாக கொட்டினார். இப்படியான சூழலில் தற்போது அவர் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பே இதற்கான ஒப்பந்தம் நடைபெற்ற நிலையில், பல்வேறு பிரச்சினைகளால் சூட்டிங் தடைபட பிறகு பிரச்சனை முடிந்து படபிடிப்பு வேகமாக நடைபெற்றது.

இரண்டாம் பாகத்தை மட்டுமே எடுக்க முடிவெடுத்த சங்கர், காட்சிகளின் நீளம் அதிகரித்ததால் மூன்றாம் பாகத்தையும் எடுக்க திட்டமிட்டு இருக்கிறார். மூன்றாம் பாகத்தில் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டு இருக்கும் நிலையில், இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் ஜூன் மாதம் வெளியாகிறது.

இதில் காஜா அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பிரியா பவானி சங்கர், எஸ் ஜே சூர்யா, பாபி சிம்ஹா ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இதில் இந்தி நடிகை மனிஷா கொய்ராலாவும் ஒரு சில காட்சியில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவர் ஏற்கனவே முதல் பாகத்தில் சேனாதிபதி மகனான சந்துருவின் காதலியாக நடித்திருப்பார். அதன் தொடர்ச்சியாக இவர் இரண்டாம் பாகத்திலும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சற்று முன்