- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த படத்தை போலவே இந்த படத்திலும் வெச்சு செஞ்சுட்டாரா இயக்குனர் வெங்கட்பிரபு? - பிரசாந்த் பேச்சால்...

அந்த படத்தை போலவே இந்த படத்திலும் வெச்சு செஞ்சுட்டாரா இயக்குனர் வெங்கட்பிரபு? – பிரசாந்த் பேச்சால் குழப்பத்தில் தவிக்கும் விஜய் ரசிகர்கள்

- Advertisement -

இயக்குனர் வெங்கட்பிரபு துவக்கத்தில் சில படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்தாலும், ஒரு கட்டத்தில் அவருக்குள் இருந்த இயக்குனர் வெளிவந்துவிட்டார். சென்னை 28 படத்தில் ஒரு இயக்குனராக முத்திரை பதித்த வெங்கட்பிரபு மீண்டும் பல படங்களை இயக்கினார்.

அடுத்து சரோஜா, கோவா, சென்னை 28 படத்தின் 2ம்பாகம், மங்காத்தா, மாநாடு என பல படங்களை இயக்கிய வெங்கட்பிரபு, இப்போது நடிகர் விஜய் நடிப்பில் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்போது ரஷ்யாவில் படப்பிடிப்பு வெகு பரபரப்பாக நடந்து வருகிறது.

- Advertisement -

இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சுதீப், மைக் மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, ரம்யாகிருஷ்ணன் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

இந்நிலையில், இதுவரை இரண்டு மூன்று முறை நடிகர் பிரசாந்த் இந்த படம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு வித்யாசமான அப்டேட் கொடுத்து வருகிறார். அதாவது நான் விஜய் படத்தில் நடிக்கவில்லை. விஜயுடன் நடிக்கிறேன் என்று ஒருமுறை கூறினார். இந்த படத்தில் என்னுடைய கேரக்டர் மிகவும் வித்யாசமானது மட்டுமின்றி, இந்த கேரக்டர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் கூறியிருந்தார்.

- Advertisement -

மேலும் இந்த படத்தில் நடித்த அனைத்து கேரக்டர்களுக்குமே தனித்தனியான முக்கியத்துவம் இருக்கிறது. அதனால் மல்ட்டி ஸ்டார் படமாக இது உருவாகிறது என்றும் சில வார்த்தைகளை மேலோட்டமாக சொல்லி இருந்தார். பிரசாந்த் பேசுவதை பார்த்தால் கோட் படத்தில் விஜய்தான் கதாநாயகனா என்ற கேள்வி அவரது ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

ஏனெனில் ஏற்கனவே மங்காத்தா என்ற படத்தில், அஜீத்குமார் ஹீரோவாக இருந்தும் கடைசியில் அர்ஜூனுக்கு அதிக முக்கியத்தும் தந்துவிட்டதால்தான், படம் வெளியான பிறகு அதை பார்த்து டென்சன் ஆன அஜீத்குமார், வெங்கட்பிரபுவுடன் தொடர்பையே துண்டித்து விட்டார். அதுபோல் கோட் படத்திலும் விஜயை டம்மியாக்கி, பிரசாந்தை ஹீரோவாக்கி விட்டாரா என்ற கவலையும், தவிப்பும் விஜய் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்