- Advertisement -
Homeபொழுதுபோக்குநொந்துப்போன விஜய் சேதுபதியின் டிராக்கையே மாற்றிவிட்ட ரஜினிகாந்த், ஓஹோ இதுதான் விஷயமா?

நொந்துப்போன விஜய் சேதுபதியின் டிராக்கையே மாற்றிவிட்ட ரஜினிகாந்த், ஓஹோ இதுதான் விஷயமா?

- Advertisement -

விஜய் சேதுபதி சமீப காலமாக பல திரைப்படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். அவர் கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படங்கள் அவ்வளவாக வெற்றி பெறுவதில்லை என்பதை நாம் பார்த்து வருகிறோம். சமீபத்தில் கூட விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த “மாமனிதன்”, “யாதும் ஊரே யாவரும் கேளிர்” ஆகிய திரைப்படங்கள் வெளிவந்தன. ஆனால் அத்திரைப்படங்கள் ரசிகர்களை கவரவில்லை.

ஆனால் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த “விக்ரம் வேதா”, “பேட்ட”, “மாஸ்டர்”, “விக்ரம்” ஆகிய திரைப்படங்கள் வேற லெவலில் ஹிட் அடித்தன. விஜய் சேதுபதியின் வில்லத்தனங்களை ரசிகர்கள் பெரிதும் ரசித்து பார்க்கின்றனர். மேலும் ஹிந்தியில் ஷாருக்கானின் “ஜவான்” திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். இவ்வாறு விஜய் சேதுபதி இந்திய சினிமாவின் வில்லன் நடிகராகவே மாறி வருகிறார்.

- Advertisement -

விஜய் சேதுபதி வில்லனாக மட்டுமல்லாது சில திரைப்படங்களில் கேமியோ ரோலிலும் நடித்துள்ளார். ஒரு காலகட்டத்தில் எங்கு திரும்பினாலும் விஜய் சேதுபதியின் திரைப்படங்களாகவே வெளிவந்துகொண்டிருந்தன. இதனை ரசிகர்கள் பலரும் கேலி செய்வதும் உண்டு.

இந்த நிலையில் விஜய் சேதுபதியின் இந்த போக்கிற்கு ரஜினிகாந்த்தான் காரணம் என்று கூறப்படுகிறது. அதாவது “பேட்ட” திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்துக்கொண்டிருந்தபோது படப்பிடிப்பின் இடைவேளையில் ரஜினிகாந்தும் விஜய் சேதுபதியும் பேசிக்கொண்டிருந்தனராம். அப்போது ரஜினிகாந்த், “இப்போ கெரியர் எல்லாம் எப்படி போகுது?” என கேட்டாராம்.

- Advertisement -

அதற்கு விஜய் சேதுபதி, “சமீப காலமாக எந்த திரைப்படங்களும் ஓடவில்லை” என்று கூறினாராம். அப்போது ரஜினிகாந்த், ‘ஒரு நடிகன் என்றால் எந்த வாய்ப்பு வந்தாலும் விடாமல் நடிக்க வேண்டும். சம்பாதிக்கிற நேரத்தில் சம்பாதிச்சிடனும். எதையும் விடாதே” என்று அறிவுரை கூறியுள்ளார். அதில் இருந்துதான் விஜய் சேதுபதி எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நடிக்க தொடங்கிவிட்டாராம்.

- Advertisement -

சற்று முன்