அஜித்குமார் நடித்த வலிமை படத்தை தொடர்ந்து வந்த படம் துணிவு. இந்த படத்துக்கு பிறகு, இப்போது விடாமுயற்சி படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து வருகிறது. அஜீத், திரிஷா நடிக்கும் இந்த படத்தை, மகிழ் திருமேனி இயக்குகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு, மிக தாமதமாக விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில், ஏகே ரசிகர்கள் இப்போதுதான் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.
இதற்கிடையே, விடாமுயற்சி படத்துக்கு பிறகு அஜீத் நடிக்கும் அடுத்த படத்தின் தகவல் வெளியாகி இருக்கிறது. விஷால், எஸ்ஜே சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன், அஜீத் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக வரும் 19ம் தேதி, அவருக்கு தயாரிப்பு நிறுவனம் சார்பில் பெருந்தொகை, அட்வான்ஸாக தரப்பட .உள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் ஏற்கனவே திரிஷா இல்லைன்னா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பஹிரா ஆகிய படுதோல்வி படங்களை தந்த இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இயக்கிய படங்களில் மிகப்பெரிய வெற்றியை தந்த படம் மார்க் ஆண்டனி என்ற ஒரே படம்தான். அதுவும் எஸ்ஜே சூர்யா தான் அந்தப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம். சில்க் ஸ்மிதா நடித்த காட்சிகளும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன.
மொத்தம் 4 படங்களில், மூன்று பிளாப் படங்களை தந்த ஆதிக் ரவிச்சந்திரன், மார்க் ஆண்டனி பட சக்சஸ் மீட்டில் கூட படத்தில் நடித்த விஷால், எஸ்ஜே சூர்யா, தயாரிப்பாளர், டெக்ஷினீயன்களுக்கு நன்றி சொல்லாமல் அஜீத்குமாருக்கு நன்றி சொல்லிக்கொண்டு இருந்தார். இந்த படத்தின் வெற்றியை அஜீத்குமாருக்கு சமர்ப்பணம் செய்வதாக கூறியிருந்தார். இது தமிழ் சினிமாவினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
ஏற்கனவே, நேர்கொண்ட பார்வை படத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் உதவி இயக்குநராக பணிசெய்த போது, அஜீத்குமாரிடம் கதை சொல்லி இருக்கிறார். பெரிய படம் செய்துவிட்டு வாங்க, நாமும் படம் பண்ணலாம் என அவர் உறுதியாக கூறி இருக்கிறார். எனவே, மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியை காட்டி, அஜீத்குமாரின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.
ஏற்கனவே, நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவனிடம் கதை கேட்டுவிட்டு, தனது படத்தை இயக்க வாய்ப்பளித்த அஜீத்குமார், பின்பு அவர் சொன்ன கதை பிடிக்கவில்லை என அவரை விலக்கி விட்டார். அதன்பிறகு விடாமுயற்சி படத்தை மகிழ்திருமேனி இப்போது இயக்கி வருகிறார்.
ஆதிக் ரவிச்சந்திரன், ஏற்கனவே சொதப்பலான படங்களை தந்து, தோல்விகளை கண்டவர். அதனால், அஜீத்குமாருக்கு கதை திருப்தியாக இல்லை என்றால், விக்னேஷ் சிவனை போல, ஆதிக் ரவிச்சந்திரனையும் கழட்டி விட அஜீத்குமார் தயங்க மாட்டார். அதனால், வலிமையான நல்ல கதையாக உருவாக்கும்படி பலரும், ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.





