இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இடத்தில் இருக்கக்கூடிய சிறந்த படைப்பாளியாக, தரமான இயக்குனராக கவனிக்கப்படுகிறார். அவர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் முதலில் வெளிவந்த படம் பொல்லாதவன். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கூர்ந்து கவனிக்கப்பட்ட இயக்குனராக மாறினார்.
தொடர்ந்து வெற்றிமாறன் அடுத்து இயக்கிய படம் ஆடுகளம். சேவல் சண்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மதுரை வாழ் மக்களின் வாழ்க்கை முறையை சொன்ன இந்த படத்தில், தனுஷ் வேற லெவலில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து அசுரன், வடசென்னை உள்ளிட்ட மிகச்சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களை இயக்கி தனது படைப்புத்திறனை வெளிப்படுத்திய இயக்குனர் வெற்றிமாறன், அடுத்து இயக்கிய படம் தான் விடுதலை 2.
காமெடியனாக நடித்துக் கொண்டிருந்த நடிகர் சூரியை, குமரேசன் என்ற கேரக்டரில் நடிக்க வைத்து, கதாநாயகனாக வெற்றி பெறச் செய்தார். இப்போது விடுதலை படத்தின் 2 பாகத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. ஏறக்குறைய ஒரு ஆண்டுக்கு மேலாகியும் இன்னும் இந்த படத்தின் சூட்டிங் நிறைவடையவில்லை. விரைவில் இந்த படம் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் நடிகர் சூர்யா கமிட்டான வாடிவாசல் படமும் இன்னும் படப்பிடிப்பு துவங்கப்படாமல் உள்ளது. இந்த படத்தில் சூர்யா நடிப்பாரா மாட்டாரா என்பதும் குழப்பத்தில் இருந்து வருகிறது. ஒருவேளை அவர் நடிக்காவிட்டால், அவருக்கு பதிலாக தனுஷ் நடிக்கலாம் என்று பேசப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் வெற்றிமாறனிடம் வட சென்னை படத்தின் இரண்டாம் பாகம் வருமா என்று ரசிகர்கள் தரப்பில் இருந்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பதில் அளித்த இயக்குனர் வெற்றிமாறன், எனக்கு விடுதலை 2 படத்தின் ரிலீஸ் தேதியே எப்போது என்று தெரியவில்லை. அதுவும் எடுத்து முடிக்கப்பட்ட படம். அதுக்கே எனக்கு இன்னும் விடை தெரியவில்லை. இதற்குப் பிறகு வாடிவாசல் படத்தின் வேலைகள் நிறைய இருக்கிறது. அதன் பிறகு என்னென்ன நடக்குமோ என்பது இனிமேல்தான் தெரியும். அதனால் வடசென்னை 2 எடுக்க நேரம் எடுக்கும் என்று பதில் கூறினார்.
அப்போதும் ரசிகர்கள் விடாப்பிடியாக வட சென்னை 2 படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு வெற்றிமாறன், அவ்வளவுதான், நேரம் எடுக்கும் என்று சொன்னால் அவ்வளவுதான், என்று கூறியிருக்கிறார் அதாவது வடசென்னை இரண்டாம் பாகம் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதை சூசகமாக வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். இதற்கு முக்கிய காரணம் தனுஷ் தரப்பில் இருந்து இந்த படத்தில் நடிப்பதற்கான ஆர்வம் இல்லை என்றும் சொல்லப்படுகிறது





