நடிகர் விஜய் தற்போது கோர்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்பதை சுருக்கிதான் கோட் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம் தொடர்பான எதிர்பார்ப்பு இதன் அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் படத்தின் இயக்குனரான வெங்கட் பிரபு தான். அஜித்தை வைத்து மங்காத்தா என்னும் மாஸ் திரைப்படத்தை கொடுத்த அவர், சிம்புவை வைத்து மாநாடு என்னும் வெற்றி திரைப்படத்தை இயக்கினார்.
இதனால் கண்டிப்பாக, வெங்கட் பிரபு சொல்லி அடிப்பார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். அதிலும், இந்த முறை டைம் டிராவல் கதையை வெங்கட் பிரபு கையில் எடுத்திருக்கிறார். படத்தில் இரண்டு விஜய் பேர் இருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தந்தை விஜய் மற்றும் மகன் விஜய் என இரண்டு கதாபாத்திரங்களில் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான போஸ்டர்களும் சமீபத்தில் வெளியானது. ஆனால் படத்தில் இரண்டு விஜய் அல்ல, ஒரே விஜய் தான் டைம் டிராவல் முறைப்படி வந்து செல்வார் என்று சிலர் கூறுகிறார்கள். இப்படி படத்தின் கதையிலேயே எக்கச்சக்க எதிர்பார்ப்பு நிலவுகிறது. இது ஒரு புறம் இருக்க கோட் படத்தில் இணைந்திருக்கும் நட்சத்திரங்கள் குறித்த பார்வையும் ரசிகர்கள் பக்கம் திரும்பி உள்ளது.
இதில், மோகன் பிரசாந்த் பிரபுதேவா லைலா சினேகா மீனாட்சி சவுத்ரி பிரேம்ஜி அமரன் வைபவ் அஜ்மல் யோகி பாபு வி டிவி கணேஷ் இவானா யுகேந்திரன் அரவிந்த் ஆகாஷ் என ஏராளமான நடித்திருக்கிறார்கள். இத்தனை பேருக்கும் வெங்கட் பிரபு எந்தவிதமான ரோலை கொடுத்திருப்பார் என்று பலரும் பேசி வருகிறார்கள். அதுபோக நடிகை திரிஷாவும் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடி இருக்கிறார்.
இந்த நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோட் திரைப்படத்திலிருந்து முதல் பாடல் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதன் கார்க்கி எழுத்தில் நடிகர் விஜயை இந்த பாடலை பாடி இருக்கிறார். அனேகமாக, இந்த பாடல் கிரிக்கெட்டை மையப்படுத்தி இருக்கும் என்று கூறுகிறார்கள். இதன் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.





