- Advertisement -
Homeபொழுதுபோக்குஇனி போராடிக் கொண்டிருப்பதில் எந்த பலனும் இல்லே… ஆர்த்தி ரவி எடுத்த அதிரடி முடிவு -...

இனி போராடிக் கொண்டிருப்பதில் எந்த பலனும் இல்லே… ஆர்த்தி ரவி எடுத்த அதிரடி முடிவு – நடிகர் ரவி மோகன் பதிலளிக்க கோர்ட் உத்தரவு!

- Advertisement -

விக்ரமாதித்யன் கதை போல எப்படியாவது கெனிஷாவுடன் நெருக்கமான தன் கணவர் ரவி மோகனை மீட்டுவிட வேண்டும் என்று போராடி வந்த அவரது மனைவி ஆர்த்தி ரவி இப்போது தனது மனநிலையை மாற்றிக்கொண்டு இருக்கிறார். அவர் கடைசியாக நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கை அதை தெளிவுபடுத்தி விட்டது. இனியும் தன் கணவர் கெனிஷாவை விட்டுவிட்டு மனைவி பிள்ளைகள் என திரும்பி வரவே வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு ஆர்த்தி ரவி வந்துவிட்டார்,

அதனால் கடைசியாக அவர் வெளியிட்ட அறிக்கையில், வழக்கம் போல தன் கணவரிடம் கோரிக்கை விடும் தொனியில் பேசாமல், ரவி மோகன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் அடுக்கியிருந்தார். அதில், என் கணவர் ரவி மோகன் தான் துன்புறுத்தப்பட்டதாகவும், தனிமைப்படுத்தப்பட்டதாகவும் புகார் கூறியிருந்தார்.

அப்படியானால் ஏன் இத்தனை ஆண்டுகள் காத்திருந்தார்? ஏன் ஒவ்வொரு ஆண்டும் திருமண நாளை கொண்டாடினார்? ஏன் குடும்ப விழாக்களில் கலந்து கொண்டார்? வாழக்கூடாத சூழ்நிலையில் எதற்காக இத்தனை வருடங்கள் அவர் வாழ்ந்தார்?

தனக்கு உரிமையுள்ள அனைத்தையும் நன்றாக அனுபவித்து விட்டு தனது குட்டு வெளிப்பட்டு விடும், தன் மீது குற்றம் சுமத்தப்படும் என்ற நிலையில்தான் அவர் வீட்டை விட்டு வெளியேறினார். அவர் வெளியேறியதற்கு காரணம் பயம் அல்ல, அதற்கு மேல் அவருடைய ரகசிய வாழ்க்கையை காப்பாற்ற முடியாமல் போனதே என்று ஆர்த்தி ரவி ஆவேசமாக கூறியிருக்கிறார்.

இந்த சூழலில் நடிகர் ரவி மோகன் தனது வாழ்க்கை இனி கெனிஷாவுடன்தான் என்ற தீர்க்கமான முடிவுக்கு வந்து விட்ட நிலையில், ஆர்த்தி ரவியும் இனி தன் கணவரை தன்னுடன் சேர்ந்த வாழ சொல்வதில், அதற்கான முயற்சிகளை மேற்கொள்வதில் எந்த பலனும் இல்லை என்பதை தெரிந்துக்கொண்டு விட்டார். அதனால் அவர் முக்கிய முடிவுக்கு வந்துவிட்டார்.

இந்நிலையில் நடிகர் ரவி மோகன் ஆர்த்தி விவாகரத்து வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தனது கணவர் ரவியிடம் இருந்து தனக்கு மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் வழங்கக்கோரி, ஆர்த்தி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதற்கு நடிகர் ரவிமோகன் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணையை வருகிற ஜூன் 12ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

சற்று முன்