- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த படமும் கை கொடுக்கலையே ப்ரோ… 3 நாட்களில் பிரதர் வசூலித்தது இவ்வளவுதானா? -...

இந்த படமும் கை கொடுக்கலையே ப்ரோ… 3 நாட்களில் பிரதர் வசூலித்தது இவ்வளவுதானா? – ஜெயம் ரவிக்கு மீண்டும் தொடரும் தோல்வி!

- Advertisement -

ஜெயம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஜெயம் ரவி. துவக்கத்தில் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி பேராண்மை சந்தோஷ் சுப்பிரமணியம் உனக்கும் எனக்கும் தீபாவளி தனி ஒருவன் போகன் அடங்க மறு போன்ற பல வெற்றி படங்களை தந்தவர் ஜெயம் ரவி. ஆனால் அதற்குப் பிறகு அவரது படங்கள் ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பை பெறவில்லை.

குறிப்பாக அகிலன் இறைவன் சைரன் 108 போன்ற படங்கள் படுதோல்வி அடைந்தன. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் மட்டும் வெற்றிகரமாக ஓடியது. ஆனால் அது கார்த்தி, விக்ரம் என மல்டி ஸ்டார் நடிகர்கள் நடித்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் ஜெயம் ரவி படங்களின் தொடர் தோல்வி ரசிகர்களை பலத்த ஏமாற்றத்தில் தள்ளியது.

- Advertisement -

இந்நிலையில் சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற வெற்றி படங்களை இயக்கிய எம் ராஜேஷ் இயக்கிய படம் பிரதர். கடந்த தீபாவளியன்று வெளியானது. இந்த படத்தில் ஜெயம் ரவி பிரியங்கா மோகன் நட்டி பூமிகா சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

அக்கா தம்பி பாசத்தை மையப்படுத்திய பிரதர் படம் நிச்சயமாக பெரிய அளவில் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீபாவளிக்கு வெளியான அமரன், பிரதர், பிளடி பெக்கர் லக்கி பாஸ்கர் ஆகிய 4 படங்களுக்கு மத்தியில் அமரன் படமும், லக்கி பாஸ்கர் படமும் ரசிகர்களின் மனம் கவர்ந்த படமாக இருந்தன.

- Advertisement -

இந்நிலையில் ஜெயம் ரவி நடித்த பிரதர் படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது. நிச்சயமாக இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் கலகலப்பான படமாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், பிரதர் படம் கடுமையான எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

அதனால் கடந்த 3 நாட்களில் பிரதர் படம் உலக அளவில் 7 கோடி ரூபாய் மட்டும் தான் வசூலித்திருப்பதாக தெரிய வந்துள்ளது. ஜெயம் ரவி போன்ற ஒரு முன்னணி நடிகர் நடித்த படம் 3 நாட்களில் 7 கோடி ரூபாய் வசூல் என்பது மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது. எனினும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் படமாக இல்லாததால், பல தியேட்டர்களில் பிரதர் படத்தை மாற்றிவிட்டு லக்கி பாஸ்கர் படத்தை திரையிட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்