- Advertisement -
Homeபொழுதுபோக்குஷங்கர் வீட்டு பிரமாண்ட திருமணம்; தாம்பூலப் பையில் என்ன இருந்தது தெரியுமா? - ஆனாலும் அந்த...

ஷங்கர் வீட்டு பிரமாண்ட திருமணம்; தாம்பூலப் பையில் என்ன இருந்தது தெரியுமா? – ஆனாலும் அந்த டைரக்டர் கொஞ்சம் ஓவர்தான்!

- Advertisement -

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா திருமணம் நேற்று, சென்னையில் கோலாகலமாக நடந்தது. இந்த திருமண நிகழ்வில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ராம்சரண் உள்ளிட்ட பிரபல நடிகர், நடிகைகள் பலரும் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினார். இந்த திருமண விழாவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் ஷங்கர் எந்த திருமணத்திற்கு சென்றாலும், அங்கு கண்டிப்பாக திருமண விருந்து சாப்பிட்டு விட்டுதான் வருவார். ஒரு திருமணத்துக்கு சென்றால், அங்கே விருந்து சாப்பிடுவதுதான் அந்த திருமணத்திற்கு அழைத்தவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை என்ற கருத்தை கொண்டவர் இயக்குனர் ஷங்கர்.

அதனால் தனது மகள் ஐஸ்வர்யா திருமணத்திற்கு வந்த அனைவருமே, கட்டாயம் திருமண விருந்து சாப்பிட்டு விட்டு தான் செல்ல வேண்டும் என்பதை ஒரு கண்டிப்பான உத்தரவை அமல்படுத்தியிருந்தார் ஷங்கர். மாதம்பட்டி ரங்கராஜ் தலைமையில், தடபுடலாக சூப்பர் சமையல் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதனால் இயக்குனர் ஷங்கர் இல்ல திருமண விழாவிற்கு வந்தவர்களை முறையாக உபசரித்து, விருந்து சாப்பிட வைக்கும் பொறுப்பை தனது முன்னாள் உதவி இயக்குனர், அதாவது இப்போது பாலிவுட்டில் மிகப்பெரிய இயக்குனராக இருக்கும் அட்லியிடம் ஒப்படைத்திருந்தார் இயக்குனர் ஷங்கர். அதனால் ரிசப்ஷனில் இருந்து, திருமண பந்தி சாப்பிடும் பகுதி வரை அவர்களை கவனித்து வரவேற்று, அவர்களை அழைத்துச் சென்று திருமண விருந்து சாப்பிட வைத்து அனுப்பியிருக்கிறார் இயக்குனர் அட்லி.

இவ்வளவு பெரிய இயக்குனராக, பாலிவுட் ஸ்டார் டைரக்டராக உயர்ந்தும் இப்படி அட்லி, தனது குருநாதர் ஷங்கர் மகள் திருமண நிகழ்வில் இவ்வளவு தூரம் இறங்கி வேலை செய்தது அங்கிருந்தவர் மத்தியில் பலத்த பாராட்டை பெற்றது. பார்ப்பதற்கு கொஞ்சம் ஓவராக தெரிந்தாலும், அவருடைய அந்த விசுவாசம் என்பது மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருந்தது என்று குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் ஷங்கர் வீட்டு திருமணத்துக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த் கட்டாயம் சாப்பிட்டாக வேண்டும் என்று சங்கர் விரும்பியதால், ரஜினி தவிர்க்க முடியாமல், விருந்து சாப்பிட்டுவிட்டு சென்றிருக்கிறார். இந்த திருமணத்துக்கு வந்த அனைவருக்கும் தாம்பூலப்பை வழங்கப்பட்டுள்ளது. அந்த பையில் திருப்பதி லட்டு இருந்துள்ளது. இதற்காக திருப்பதியில் இருந்து ஆயிரக்கணக்கான லட்டுக்கள் ஸ்பெஷலாக வரவழைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

சற்று முன்