- Advertisement -
Homeபொழுதுபோக்குபல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் தமிழ்நாட்டில் ராயன் படம் 5 நாட்களில் வசூலித்தது இத்தனை கோடியா? -...

பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் தமிழ்நாட்டில் ராயன் படம் 5 நாட்களில் வசூலித்தது இத்தனை கோடியா? – அடேங்கப்பா… மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

- Advertisement -

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படம் கடந்த 12ம் தேதி ரிலீஸ் ஆனது. அந்த படம் ரிலீஸ் ஆன முதல் நாள், முதல் காட்சி பார்த்த உடனே, சமூக வலைதளங்களில் உடனடி ரிசல்ட்டை ரசிகர்களை அறிவிக்க துவங்கி விட்டனர். இந்தியன் தாத்தா ரசிகர்களை கதற விடுகிறார் என்கிற அந்த வார்த்தைகளில் கிடைத்த ஏமாற்றம், அந்த படத்தை எந்திரிக்கவே விடாமல் செய்துவிட்டது.

ஆனால் தனுஷின் 50வது படம் ராயன் ரிலீஸ் ஆன அன்று, முதல் நாள் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் சொன்ன வார்த்தைகள், வெற்றிமாறன் ரேஞ்சுக்கு தனுஷ் படம் எடுத்து இருக்கிறார், வேற லெவலில் சம்பவம் செய்துவிட்டார் என்ற விமர்சனம்தான், அந்த படத்தை இப்போது வரை வெற்றி நடை போட வைத்திருக்கிறது.

- Advertisement -

அதற்கு பிறகு தனுஷின் ராயன் படத்தில் கதை இல்லை, படம் முழுக்க வன்முறை காட்சிகள், வடசென்னை 2ம் பாகம் போல படம் இருக்கிறது, படத்தில் காமெடி இல்லை போன்ற எதிர்மறையான விமர்சனங்கள் இருந்தாலும், கொடுத்த டிக்கெட் காசுக்கு படம், தகுதியானதா இல்லையா என்ற ரசிகர்களின் கேள்விக்கு, படம் திருப்தியளிக்கிறது என்ற பதிலை சொல்ல வைத்திருக்கிறார் தனுஷ்.

அதிலும் ஏஆர் ரகுமானின் இசை, படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறது. பீட்டர் ஹெயினின் சண்டை காட்சிகள் படத்துக்கு வலிமை சேர்த்திருக்கிறது. ஒரு தரப்பு படம் மோசம், மோசம் என்று கடுமையாக விமர்சித்தாலும் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் ராயன் படம் பார்க்க செல்லும் கூட்டம் குறையாமல் இருக்கிறது. அதற்கு காரணம், படம் பார்த்தவர்கள் சொல்லும் நேர்மறையான விமர்சனங்களாகவும் இருக்கலாம்.

- Advertisement -

இந்நிலையில், ராயன் படம் முதல் நாளிலேயே பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. படம் வெளியாவதற்கு முன்பே ப்ரீ புக்கிங் என்ற வகையில் ரூ. 5 கோடியை கடந்திருந்தது குறிப்பிடத்தக்கது. முதல் நாளன்று உலகளவில் 17.5 கோடி ரூபாய் வசூலித்த நிலையில், தமிழ் நாட்டில் முதல் நாள் வசூல் மட்டும் ரூ. 10.2 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்போது ராயன் படம் வெளியாகி 5 நாட்கள் கடந்த நிலையில், உலக அளவில் இதுவரை 92 கோடி ரூபாய் வசூலை ராயன் படம் கடந்துள்ளது. இன்னும் சில தினங்களில் 100 கோடி ரூபாய் என்ற இலக்கை எட்டிவிடும் என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில், தமிழ்நாட்டில் மட்டும் கடந்த 5 நாட்களில் ராயன் படத்தின் வசூல் 46 கோடி ரூபாயை கடந்துள்ளது. எனவே, மிக விரைவில் தமிழ்நாட்டில் ஆப் செஞ்சுரி 50 கோடி ரூபாய், உலகளவில் செஞ்சுரி 100 கோடி ரூபாயை ராயன் விளாசித் தள்ளுவார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்