கமல்ஹாசன் தற்போது இந்தியன் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். முதலில் இந்தியன் பார்ட் 2 மட்டுமே எடுக்க முடிவு செய்யப்பட்டு, தற்போது மூன்றாவது பாகமாக வளர்ந்து இருக்கிறது. சங்கர் இயக்கத்தில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில், சித்தார்த், ரகுல் பிரீத் சிங் காஜல் அகர்வால் பிரியா பவானி சங்கர் உள்பட ஏராளமான நடித்துள்ளனர்.
ஜூன் மாதம் இந்த திரைப்படம் வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்தியன் படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்கும் பணியில் சங்கர் ஈடுபட இருக்கிறார். இது ஒரு புறம் இருக்க, கமல்ஹாசன் அடுத்ததாக மணிரத்னத்துடன் இணைந்து இருக்கிறார்.
இந்த திரைப்படத்திற்கு தக் லைப் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தை, உதயநிதி ஸ்டாலின் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இதில், துல்கர் சல்மான், ஜெயம் ரவி, திரிஷா, கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி, நாசர் உள்ளிட்டோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து சைபீரியா நாட்டில் படத்திற்கான படப்பிடிப்பும் தொடங்கியது. இப்படியான சூழலில், நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன், பரப்புரை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு திரும்பினார். இதன் காரணமாக படத்தின் சூட்டிங் தள்ளி வைக்கப்பட்டது.
இது ஒரு பக்கம் இருக்க கால் சீட் பிரச்சினை காரணமாக, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி இருவரும் படத்திலிருந்து வெளியேறியதாக தகவல் வெளியானது. அவருக்கு பதில் சிம்புவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதற்கான டெஸ்ட் சூட்டிங்கை படக்குழுவினர் நடத்தி முடித்தனர். இதே போல் ஜெயம் ரவி கதாபாத்திரத்திற்கு, அரவிந்த்சாமி தேர்வானதாக கூறப்பட்டது. இந்த சூழலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தக் லைப் திரைப்படத்திலிருந்து திருப்பமான ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
அதாவது படத்தில் இருந்து வெளியேறும் முடிவை துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் கைவிட்டு இருக்கிறார்களாம். தொடர்ந்து தேர்தல் முடிந்ததும் அவர்கள், படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க சிம்புவும் படத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு இரட்டை வேடங்களை மணிரத்னம் வழங்க இருக்கிறாராம். சைபீரியா டெல்லி மற்றும் சென்னையில் இதன் படப்பிடிப்பு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





