- Advertisement -
Homeபொழுதுபோக்குஇப்படி ஒரு விஷயத்தை யாருமே சொல்லலையே…? - பிக்பாஸ் ஜிபி முத்து வெளியிட்ட வீடியோவுக்கு பலரும்...

இப்படி ஒரு விஷயத்தை யாருமே சொல்லலையே…? – பிக்பாஸ் ஜிபி முத்து வெளியிட்ட வீடியோவுக்கு பலரும் பாராட்டு – ஏலே… இது வேற லெவல்!

- Advertisement -

சமூக வலைதளங்களில் வீடியோ மற்றும் ரீல்ஸ் வெளியிட்டு மக்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச் ஆனவர் ஜி பி முத்து. இவரது முழு பெயர் ஜி. பேச்சிமுத்து. அதை சுருக்கி ஜிபி முத்து என மாற்றிக்கொண்டார். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அவர் அந்த ஊர் பாஷையில் திட்டி திட்டி பேசுவது பெரிய அளவில் வைரலானது.

கடந்த 2022ம் ஆண்டில் விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக பங்கேற்றார். ஆனால் 2 வாரங்கள் மட்டுமே அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தார். பிறகு அவராகவே என் குடும்பத்தை பிள்ளைகளை பிரிந்து என்னால் இங்கு இருக்க முடியவில்லை என்று தெரிவித்துவிட்டு வெளியேறி விட்டார்.

- Advertisement -

ஆனால் நடிகர் கமல்ஹாசன் கூட ஜிபி முத்து போன்றவர்கள் இன்னும் போட்டியாளராக தொடர்ந்திருக்க வேண்டும் என்று தனது விருப்பத்தை வெளிப்படையாக கூறினார். அந்த அளவுக்கு கமல்ஹாசனே ரசிக்கும் ஒரு பிக்பாஸ் போட்டியாளராக ஜிபி முத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பல பொது நிகழ்ச்சிகளில் ஒரு செலிபரட்டியாக பங்கேற்கும் ஜிபி முத்து சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

இந்த சூழலில் தற்போது அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், உள்ளூரில் உள்ள ஒரு கோவிலில் ஒலிக்க விடப்படும் பாடல்களின் சத்தம் காரணமாக அங்குள்ள பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் இடையூறை சிரமத்தை அவர் பதிவு செய்திருக்கிறார்.

- Advertisement -

அந்த வீடியோவில் ஜிபி முத்து கூறியிருப்பதாவது, என் வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற ஸ்கூலுக்கு பக்கத்துல ஒரு கோவில் இருக்கு. அந்த கோவிலில் தினமும் காலை 7 மணிக்கு பாட்டு போட ஆரம்பிச்சால் சாயந்திரம் வரைக்கும் பாட்டு போடுறாங்க. இதனால் ஸ்கூல் பசங்களோட நிலைமை என்ன ஆகிறது? இப்ப எக்ஸாம் நடக்குது. இந்த மாதிரி நேரத்தில் பாட்டு போடுவதால் பசங்கதான் கஷ்டப்படுவாங்க. சவுண்ட்டை குறைச்சு வெச்சா தான் என்ன? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

ஜிபி முத்துவின் இந்த சமூக அக்கறையான கருத்து தற்போது வைரலாகி வருகிறது. தற்போது மார்கழி மாதம் என்பதால் கோவில்களில் அதிகளவில் விழாக்கள் பூஜைகள் நடந்து வருகின்றன. அதனால் இந்த பிரச்னை எல்லா பகுதிகளிலுமே இருந்து வருகிறது. அப்படிப்பட்ட சூழலில் ஜிபி முத்துவின் இந்த சமூக விழிப்புணர்வு நிறைந்த அக்கறையான பதிவை ஏராளமானோர் பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்