- Advertisement -
Homeபொழுதுபோக்குஓட்டு போட வந்த இடத்தில் பதறிப் போன நடிகை திரிஷா - நடந்தது என்ன? போலீஸ்...

ஓட்டு போட வந்த இடத்தில் பதறிப் போன நடிகை திரிஷா – நடந்தது என்ன? போலீஸ் பாதுகாப்பில் நடந்த குளறுபடியா?

- Advertisement -

நடிகை திரிஷா இப்போது தக்லைப் படத்தில் நடித்து வருகிறார். இது தவிர மலையாளத்தில் இரண்டு படங்கள், தெலுங்கில் மெகா ஸ்டார்கள் சிரஞ்சீவி, வெங்கடேஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் மூன்று படங்கள் என மிக பிஸியாக நடித்து வருகிறார். இதுதவிர விடாமுயற்சி படத்திலும் அஜீத்குமாருக்கும் ஜோடியாக நடிக்கிறார்.

திரிஷா துவக்கத்தில் லேசா லேசா, மௌனம் பேசியதே போன்ற படங்களில் நடித்த போது, பெரிய அளவில் அவர் ரசிகர்களால் கவனிக்கப்படவில்லை. தொடர்ந்து சாமி படத்தில் சியான் விக்ரம் ஜோடியாக மாமி கேரக்டரில் நடித்த பிறகுதான் திரிஷாவின் மார்க்கெட் வெகு வேகமாக உயர்ந்தது. தொடர்ந்து மன்மதன் அம்பு, கில்லி, குருவி, ஆதி, திருப்பாச்சி, லியோ உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்தார்.

- Advertisement -

இப்படி விஜய், அஜீத், ரஜினி, கமல், விஜய் சேதுபதி, சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி என முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்த நடிகை திரிஷாவுக்கு, இடையில் மார்க்கெட்டில் சரிவு ஏற்பட்டது. அப்போது 96 படம் அவருக்கு மிகப்பெரிய அளவில் கை கொடுத்தது. இதில் அவர் நடித்த ஜானகி கேரக்டர் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வரவேற்பை பெற்றது.

இந்த படத்தைத் தொடர்ந்து, பொன்னியின் செல்வன் படத்தில் மணிரத்னம் இயக்கத்தில் நடித்து, ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார். குறிப்பாக உயிர் உங்களுடைய தேவி என்று கார்த்திக் பேசும் வசனத்தை, ரசிகர்கள் திரிஷாவை பார்த்து பேச துவங்கி விட்டனர். ஏனென்றால் திரிஷாவின் அழகு அந்த படத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

- Advertisement -

இன்று நாடாளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்த நிலையில் நடிகர், நடிகையர் பலரும் தங்களது ஜனநாயக கடமையாற்றி, தங்கள் ஓட்டுக்களை பதிவு செய்தனர். நடிகை திரிஷாவும் தனது அம்மாவுடன் ஓட்டு சாவடியில் இன்று நேரில் வந்து வாக்குப்பதிவை செலுத்தினார். அப்போது திரிஷாவை பார்க்க ரசிகர் கூட்டம் திரண்டு விட்டது.

அப்போது போலீசார் அவரை சுற்றி வளைத்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். அப்போது திரிஷாவுடன் பாதுகாப்பாக நடந்து வந்த பெண் போலீஸ் ஒருவர், கூட்டத்தில் நடந்த தள்ளுமுள்ளுவில் திடீரென தடுமாறி கீழே விழுந்தார். இதை பார்த்து திரிஷா பதறிப் போனார். அருகில் போலீசார், அவரை தூக்கி விட்டனர். இந்த சம்பவத்தால் அந்த இடத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

- Advertisement -

சற்று முன்