- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி கமல் விஜயை மிஞ்சிய நடிகர் தனுஷ்; அந்த இடத்தில் அப்படி ஒரு சம்பவமா? -...

ரஜினி கமல் விஜயை மிஞ்சிய நடிகர் தனுஷ்; அந்த இடத்தில் அப்படி ஒரு சம்பவமா? – கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்

- Advertisement -

சமீபகாலமாக நடிகர் தனுஷ், அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். குறிப்பாக நடிகர் தனுஷ், மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிந்தது முதல், அந்த பிரிவின் அறிகுறியே இல்லாமல் சினிமாவில் வழக்கம் போல நடித்து வருகிறார். குறிப்பாக இப்போது ராயன் என்ற 50வது படத்தை டைரக்ட் செய்து வருகிறார்.

மேலும், நிலவுக்கு என் மேல் கோபம் என்ற படத்தை தனுஷ் டைரக்ட் செய்கிறார். நடிகர் இளையராஜா கேரக்டரில், இளையராஜா என்ற படத்தில் தனுஷ் நடிக்கிறார். இந்த படம் இரண்டு பாகங்களாக வெளிவர இருக்கிறது. இது தவிர, தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்ற படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார்.

- Advertisement -

இதற்கிடையே கடந்த வாரத்தில் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் விவாகரத்து கேட்டு, சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். வரும் அக்டோபர் 7ம் தேதி, இந்த வழக்கு குறித்து விசாரணைக்காக இருவரும் கோர்ட்டில் நேரில் ஆஜராகவாக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா, தனுஷ் விவகாரத்துக்கான காரணங்கள் என்ன என்று கடந்த ஒரு வாரமாக சமூக வலைதளங்களில் பல்வேறு அனல் பறக்கும் விவாதங்கள் நடந்து வருகின்றன. இதில் தனுஷ் செய்தது தவறா, ஐஸ்வர்யா ராய் செய்தது தவறா, இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ வாய்ப்பு ஏற்படுத்தாத ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த் மீது தவறுகள் உள்ளதா என பல கோணங்களில் இந்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் பரவின.

- Advertisement -

இதற்கிடையே நடிகர் தனுஷ், நேற்று நாடாளுமன்ற தேர்தல் ஓட்டுப் பதிவு தமிழகம் முழுவதும் நடந்த நிலையில், தனது பகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையத்தில், ஜனநாயக கடமையாற்ற ஓட்டு போட வந்தார். அப்போது தனுஷ் வருவதற்கு முன்பே, ஓட்டு சாவடிக்கு வந்த ஜிம் பாய்ஸ், கூட்டத்தை கட்டுப்படுத்துவது போல் கயிறு கட்டுதல், அவர் வருவதற்கான முன்னேற்பாடுகளை செய்ததும், தனுஷ் வந்தவுடன் செய்த பில்டப்புகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் அங்கிருந்தவர்களுக்கு ஒருவித பதட்டத்தை, ஏற்படுத்தி விட்டது.

தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார்களான ரஜினி, கமல், விஜய், அஜீத் போன்றவர்கள் கூட அமைதியாக வந்து ஓட்டு போட்டு விட்டு சென்ற சூழ்நிலையில், ஓவர் பில்டப் செய்து தனுஷ் செய்த அலப்பறையை பார்த்து இதெல்லாம் ரொம்ப ஓவர் தான் என்று வெளிப்படையாக கமெண்ட் அடித்தனர். தனுஷ் எதற்காக இத்தனை அலப்பரையை, ஓட்டுச்சாவடி மையத்தில் செய்ய வேண்டும். ஒருவேளை அவர் ஹீரோவாா நடிக்கிற ஷூட்டிங் ஸ்பாட் என நினைத்து விட்டாரா, என்று நெட்டிசன்ஸ் கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்