- Advertisement -
Homeபொழுதுபோக்குஆறு நாட்களும், அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல்? லியோ நிகழ்த்திக் காட்டியதா இப்படி ஒரு மேஜிக் -...

ஆறு நாட்களும், அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல்? லியோ நிகழ்த்திக் காட்டியதா இப்படி ஒரு மேஜிக் – திகைத்துப்போன கோலிவுட் வட்டாரம்

- Advertisement -

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்த லியோ படம், நாளை மறுதினம் வியாழன் அன்று ரிலீஸ் ஆகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 900க்கும் மேற்பட்ட தியேட்டர்களில், லியோ வௌியிடப்படுகிறது. இதுதவிர கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் லியோ ரிலீஸ் செய்யப்படுகிறது. அங்கு அதிகாலை 4 மணி ரசிகர் காட்சிக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொருத்த வரை வரும் 19ம் தேதி முதல் 24ம் தேதி வரை, ஆறு நாட்களுக்கு தினமும், ரசிகர் சிறப்புக்காட்சி உட்பட 5 காட்சிகளுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. அதிகாலை 4 மணிக்கு காட்சிக்கு அனுமதி இல்லை என்று, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், காலை 7 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதிக்க, லியோ பட தயாரிப்பாளர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இன்று மதியத்துக்குள் இதற்கான முடிவு தெரிய வரும்.

லியோ டிரெய்லர் இதுவரை 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ள நிலையில், ப்ரீ புக்கிங் டிக்கெட்டும் ரூ. 20 கோடியை நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது. அதுதவிர இப்போது புதிய தகவலாக, தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான தியேட்டர்களில் 19ம் தேதி முதல் 24ம் தேதி வரை ஆறு நாட்களுக்கான அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல் ஆகிய விட்டதாகவும் தகவல் பரவி வருகிறது.

மெகா ஸ்டார் நடிகர்களின் படம் ரிலீஸ் ஆகும்போது, முதல் மற்றும் 2வது நாட்களில் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல் ஆவது பல நேரங்களில் நடப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், 3வது, 4வது நாட்களில் காட்சிகளுக்கு எளிதாக டிக்கெட் கிடைத்துவிடும். அதுவும் முதல் இரண்டு நாட்களில் படம் குறித்த விமர்சனம்தான், அடுத்தடுத்த நாட்களில் ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவோ, குறைக்கவோ செய்யும்.

ஆனால், லியோ படத்துக்கு மட்டும், இப்படி ஒரு மேஜிக்காக ஆறு நாட்களும், அனைத்து காட்சிகளும் பல தியேட்டர்களில் புல் ஆகி இருப்பது, பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சில தியேட்டர்களில் டிக்கெட் புக்கிங் துவங்கிய 15 நிமிடங்களில், அனைத்து காட்சிகளும் புல் ஆகி விட்டதாக
தெரிகிறது. பல தியேட்டர்களில் 21 நாட்கள் வரை புக்கிங் ஓபன் செய்யப்பட்டுள்ளது.

லியோ படத்தின் துவக்கத்தில் இருந்தே, படத்துக்கு செய்யப்பட்ட அப்டேட், புரமோசன், சர்ச்சை, விமர்சனம் என பல விதமான விஷயங்களும் படத்துக்கான மார்க்கெட்டிங் விஷயமாக அமைந்துவிட்டது. தவிர வியாழன், வெள்ளியை தொடர்ந்து சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என, பண்டிகை கால விடுமுறை நாட்களும் லியோ படத்துக்கு சாதகமாக அமைந்ததும், இந்த ஹவுஸ்புல் சாதனைக்கு வழிவகுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்