விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படத்தை இங்கு பிடிக்காதவர்கள் என்று இருக்க முடியாது என்று கூறலாம். அந்த அளவுக்கு, ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு இந்த திரைப்படம் பெற்றது. இந்த திரைப்படத்தின் மிக முக்கிய வெற்றிக்கு காரணம் அதன் திரைக்கதை ஓட்டம்தான்.
தில், தூள் ஆகிய திரைப்படங்களை இயக்கிய தரணி தான் இந்த படத்தை எடுத்திருந்தார். திரிஷா, பிரகாஷ்ராஜ், ஆசிஷ் வித்யார்த்தி, தாமு என பலர் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர். படத்தில் வேலுவாக நடித்திருந்த வேலு, எப்போது மதுரைக்கு செல்கிறாரோ அப்போது சூடு பிடிக்கும் கதை, இறுதிக்காட்சி வரை எந்த தொய்வில்லாமல் சென்று கொண்டிருக்கும்.
குறிப்பாக இடைவேளைக்கு முந்தைய 20 நிமிஷம் காட்சிகள் படத்தின் உயிர் நாடி என்று கூறலாம். இதனைத் தொடர்ந்து இரண்டாம் பாதி இப்போ ஆரம்பித்தது எப்ப முடிந்தது என்று கூட தெரியாமல் ஜெட் வேகத்தில் நகரும். இப்படி படத்தின் திரைக்கதை கட்டி போட, அதற்கு ஏற்றபடி பாடல்களையும் கொடுத்து சபாஷ் போட வைத்தார் இசையமைப்பாளர் வித்யாசாகர்.
கில்லியில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் இப்போதும் ரசிகர்களின் செல்போனில் ஃபேவரட் லிஸ்டில் உள்ளது. இப்படி மொத்தமாக அனைத்தும் சூப்பரான ரகத்தில் இருந்ததால், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் போது கூட கில்லியை இணையத்தில் வைரலாக்குகின்றனர்.
2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான இந்த திரைப்படம் தற்போது, 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான அறிவிப்பு வெளியான போதே விஜய் ரசிகர்கள் ஆவலாகினர். மீண்டும் திரையரங்குகளில் இந்த திரைப்படத்தை கொண்டாடி தீர்க்க வேண்டும் செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறிவந்தனர்.
இந்நிலையில் சொன்னபடி, விஜய் ரசிகர்கள் திரையரங்குகளில் கூறிய, கில்லி திரைப்படம் சக்கை போடு போட்டு வருகிறது. ஒரு ரீ ரிலீஸ் திரைப்படத்திற்கு இத்தனை பெரிய வரவேற்பா என்று பலரும் ஆச்சரியப்படும் அளவுக்கு கில்லியின் வருகை அமைந்துள்ளது. கிட்டத்தட்ட முதல் நாளே பத்து கோடி ரூபாய்க்கு மேல் இந்த திரைப்படம் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் 2024 ஆம் ஆண்டில் வெளியான எந்த திரைப்படமும், இப்படி ஒரு சாதனையை எட்டாத சூழலில், அதனை ரி ரிலீஸ் செய்யப்பட்ட ஒரு திரைப்படம் வசூலித்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.





