- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் படத்தை தொடர்ந்து டாக்ஸிக் படத்திலும் பிரச்னையா? இயக்குனர் ஹீரோ மோதல் - கேவிஎன் புரடக்சன்ஸ்...

ஜனநாயகன் படத்தை தொடர்ந்து டாக்ஸிக் படத்திலும் பிரச்னையா? இயக்குனர் ஹீரோ மோதல் – கேவிஎன் புரடக்சன்ஸ் தயாரிப்பாளருக்கு இப்படி ஒரு தலைவலியா?

- Advertisement -

பெங்களூருவை சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தை ரூ. 500 கோடி பட்ஜெட்டில் தயாரித்தது. ஆனால் அந்த படம் 5 மாதங்களாக ரிலீஸ் ஆகாமல் முடங்கிப் போயுள்ளது. இதையடுத்து அந்த நிறுவனம் டாக்ஸிக் என்ற படத்தையும் பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் கேஜிஎஃப் பட நாயகன் யஷ் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தை மலையாள இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். இவர் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு என்ற படத்தில் ரகுவரன் – ரேகாவின் மகளாக குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

- Advertisement -

மேலும் நடிகர் மாதவனுடன் நளதமயந்தி என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். பல மலையாள படங்களில் நடித்த கீது மோகன்தாஸ் இப்போது திரைப்பட இயக்குனராகவும் உள்ளார். டாக்ஸிக் என்ற படத்தை அவர்தான் இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கிய 40 நாட்களில் படத்தின் நாயகன் யஷ்க்கும் இயக்குனர் கீது மோகன்தாஸ்க்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. சமீபத்தில் எடுக்கப்பட்டது வரை படத்தை போட்டு பார்த்த வகையில் படத்தின் நாயகன் யஷ்க்கு இந்த படத்தில் திருப்தியே ஏற்படவில்லை.

- Advertisement -

அதனால் இந்த படத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளை அகற்றிவிட்டு மீண்டும் ரி ஷூட் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் படத்தின் 70 சதவீத காட்சிகளை நீக்கிவிட்டு 100 நாட்கள் மீண்டும் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைக்கேட்டு கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் ஆடிப்போயுள்ளது. 70 சதவீதம் படத்தை மீண்டும் ஷூட்டிங் செய்வது என்றால் இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளும் அதற்கான செலவுகளும் வீண்தான். மேலும் 100 நாட்கள் ரி ஷூட் செய்ய மீண்டும் பல கோடி ரூபாய் தயாரிப்பு நிறுவனம் செலவு செய்ய வேண்டும். இப்படி ஒரு நெருக்கடியை படத்தின் ஹீரோ யஷ் மற்றும் இயக்குனர் கீது மோகன்தாஸ் இருவரும் கேவிஎன் நிறுவனத்துக்கு தந்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்