- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடுத்து சூப்பர் ஸ்டார் படத்தில் நடிக்க கமிட் ஆன நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், அட்ரா சக்க...

அடுத்து சூப்பர் ஸ்டார் படத்தில் நடிக்க கமிட் ஆன நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், அட்ரா சக்க – இப்படி ஒரு வாய்ப்பை அவரே எதிர்பார்த்திருக்க மாட்டாரே?

- Advertisement -

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் அட்டக்கத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தொடர்ந்து நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து, ரசிகர்களின் இடம் பிடித்தார். இன்று தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய டாப் 10 நடிகைகளில் ஒருவராக ஐஸ்வர்யா ராஜேஷ் இருந்து வருகிறார்.

குறிப்பாக மணிகண்டன் இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பையும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த பாராட்டையும் பெற்றுச் தந்தது என்றால் அது மிகையல்ல. அதேபோல் கனா படமும் படமும் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு மிகப்பெரிய அடையாளமாக அமைந்தது.

- Advertisement -

தொடர்ந்து கதை திரைக்கதை வசனம் இயக்கம், ரம்மி, திருடன் போலீஸ், ஆறாது சினம், ஹலோ நான் பேய் பேசறேன், மனிதன், தர்மதுரை, குற்றமே தண்டனை, ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், வடசென்னை, சாமி 2, டிரைவர் ஜமுனா, சொப்பன சுந்தரி, பண்ணையாரும் பத்மினியும், நம்ம வீட்டுப் பிள்ளை என பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

நயன்தாரா, ஜோதிகா, திரிஷா, கீர்த்தி சுரேஷ் போன்ற டாப் நடிகைகள் மட்டுமே கதாநாயகியை மையப்படுத்திய படங்களில் நடித்து வந்த நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகி மையப்படுத்திய கனா, டிரைவர் ஜமுனா, சொப்பன சுந்தரி, காக்கா முட்டை போன்ற படங்களின் நடித்து அதில் வெற்றியும் பெற்றார்.

- Advertisement -

தமிழில் மட்டும் இன்றி மலையாள படங்களிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வரவேற்பு பெற்று இருக்கிறார். இப்போது கன்னட நடிகர் சிவராஜ்குமார் கன்னட சினிமா உலகில் சூப்பர் ஸ்டார் ஆக இருக்கிறார். அவர் ஜெயிலர் படத்தில் ரஜினியின் நண்பராக நடித்திருந்தார். ராஜ்குமார் குடும்பத்தைச் சேர்ந்த இவரது தம்பிதான் புனீத் ராஜ்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் அடுத்து நடிக்க உள்ள உத்தர்காண்ட் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில், மலையாளத்தில் நடித்து சினிமாத்துறையில் நல்ல பெயர் வாங்கியுள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இனி கன்னடத்திலும் ஒரு முன்னணி நடிகையாக வலம் வருவார் என்று அவர் ரசிகர்கள் மகிழ்ச்சியாக கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்