- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் ஒரு ஹீரோ நீங்க ஒரு ஜீரோ - விஜயை கிண்டல் பண்ண நீங்க யாரு?...

விஜய் ஒரு ஹீரோ நீங்க ஒரு ஜீரோ – விஜயை கிண்டல் பண்ண நீங்க யாரு? – நடிகர் சத்யராஜை வெளுத்து விட்ட பிரபல இயக்குனர்!

- Advertisement -

நடிகர் சத்யராஜ் ஆரம்பத்தில் வில்லனாக நடித்தவர். பிறகு ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடித்த அவர் முதுமை காரணமாக இப்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அவரது மகள் திமுகவில் உள்ள நிலையில் திமுக தலைமை அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரவில்லை. திமுக ஆதரவாளராக சத்யராஜ் திமுக தேர்தல் கூட்டங்களில் பேசினார்.

அப்போது நடிகர் விஜய் குறித்து சத்யராஜ் மிகவும் கிண்டலாக பேசி திமுகவுக்கு ஆதரவு கேட்டார். தலைவா படம் வெளியாகாமல் சிக்கல் ஏற்பட்ட போது அன்றைய முதல்வர் ஜெயலலிதாவிடம் போய் விஜய் கெஞ்சி கேட்டார். படத்தை எப்படியாவது ரிலீஸ் பண்ணுங்கம்மா என்று அழுதார் என்று சத்யராஜ் கிண்டலாக பேசியிருந்தார்.

- Advertisement -

மேலும் விஜய் நல்ல நடிகர். அவரை நடிகராக தான் அனைவருக்கும் பிடிக்கும். எனக்கும் விஜய் படங்கள் ரொம்ப பிடிக்கும். அவர் படங்கள் பார்க்காவிட்டால் எனக்கு இரவில் தூக்கமே வராது. அதனால் அவர் சினிமாவில் இருந்தால் தான் நமக்கு ஜாலியாக இருக்கும். அதனால் அவரை மீண்டும் சினிமாவுக்கே அனுப்பி விடுவோம் என்றும் கிண்டலாக பேசி திமுகவுக்கு ஆதரவு திரட்டினார்.

நடிகர் சத்யராஜ் நடிகர் விஜயுடன் மெர்சல் நண்பன் தலைவா ஆகிய 3 படங்களில் நடித்திருக்கிறார். விஜயுடன் தலைவா படத்தில் அவரும் ஒரு முக்கியமான கேரக்டரில் அதாவது விஜய்க்கு அப்பாவாக நடித்திருந்தார். அந்த படம் ரிலீஸ் ஆக வேண்டும் என்றுதால் விஜய் பேசியதை இப்போது சத்யராஜ் மேடைகளில் கிண்டலாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் பேரரசு, நடிகர் சத்யராஜ் குறித்து கடுமையாக விமர்சித்திருக்கிறார். இதுகுறித்து இயக்குனர் பேரரசு கூறியதாவது, விஜயை கிண்டல் பண்ண நீங்க யாரு? நீங்க அந்த படத்துல நடிக்க சம்பளம் வாங்கினீங்களா? தலைவா படம் வெளிவர வேண்டும் என்பதற்கு உங்களோடு பங்கு என்ன?

அந்த படத்தில் நாம் நடித்திருக்கிறோம். படம் எப்படியாவது வெளிவர வேண்டும் என்பதற்காக பணிவாகவோ இல்லை பயமாகவோ கேட்டிருந்தாலும் அவர் ஹீரோ. நீ நடிச்சதுக்கு சம்பளமாக காசு வாங்கிட்டு போயிட்டே இல்ல? நீ ஒரு ஜீரோ என்று இயக்குனர் பேரரசு கோபமாக பேசியிருக்கிறார். நடிகர் விஜய் நடித்த சிவகாசி திருப்பாச்சி என 2 பிளாக்பஸ்டர் படங்களை இயக்கியவர் பேரரசு என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்