- Advertisement -
Homeபொழுதுபோக்குஅப்படி சொல்றவங்க எல்லாம் எங்க வாழ்றாங்கன்னு தெரியல... நெல்லையில் வெற்றிமாறன் காட்டம்... எதுக்காக இருக்கும்?...

அப்படி சொல்றவங்க எல்லாம் எங்க வாழ்றாங்கன்னு தெரியல… நெல்லையில் வெற்றிமாறன் காட்டம்… எதுக்காக இருக்கும்?…

- Advertisement -

வெற்றிமாறன் தமிழ் சினிமாவின் உச்ச இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவரது இயக்கத்தில் வெளிவந்த ஆடுகளம் மற்றும் அசுரன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் தேசிய விருது பெற்று இருக்கின்றன. தான் சொல்ல வந்ததை எந்த ஒரு சமரசமும் இன்றி தோல் உரித்து காட்டும் வெற்றிமாறனுக்கு இங்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு.

 

- Advertisement -

தற்போது அவர் விடுதலைப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். இதன் முதல் பாகம், கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்றது. விஜய் சேதுபதி நடித்திருந்தாலும் முதல் பாகத்தில் சூரி கதாபாத்திரத்திற்கே மிகப் பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதில் குமரேசனாக வாழ்ந்து, நம்மை ஆச்சரியப்படுத்தி இருப்பார் சூரி.

 

- Advertisement -

அந்தத் திரைப்படம் கொடுத்த வெற்றி சூரியை வேறொரு தளத்திற்கு கொண்டு சென்று விட்டது. இந்த நிலையில் தற்போது விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் வெற்றிமாறன் கவனம் செலுத்தி வருகிறார். இதன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.

 

இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். இந்தப் படத்தின் எடுக்கப்பட்ட காட்சிகள், ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. தற்போது இறுதி கட்ட காட்சிகளை வெற்றிமாறன் தென்காசியில் எடுத்து வருகிறார். இப்படியான சூழலில் அவர் நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ஒரு திரையரங்கில், அமீர் நடித்திருக்கும் உயிர் தமிழுக்கு திரைப்படத்தை பார்த்தார்.

 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான இறுதி கட்ட படப்பிடிப்பு தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 15 முதல் 25 நாட்கள் அங்கு படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளோம். இதன் பிறகு போஸ்ட் ப்ரடக்‌ஷன் பணிகள் நடைபெற்று, மூன்று மாதங்களில் படத்தை வெளியிட முடிவு செய்து இருக்கிறோம்.

 

இந்த படத்திற்குப் பிறகு வாடிவாசல் படத்தை எடுக்க இருக்கிறேன். இந்தியாவில் சாதிய ஏற்றத்தாழ்வு இல்லை, பாகுபாடு இல்லை என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்கள் எங்கு வாழ்கிறார்கள் என்றே தெரியவில்லை. இந்தியா முழுக்க சாதிய பாகுபாடு இருக்கிறது. தமிழ்நாட்டிலும் இருக்கிறது. இங்கு அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் அரசியலுக்கு வருவது பற்றி எனக்கு எந்த எண்ணமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

 

- Advertisement -

சற்று முன்