- Advertisement -
Homeபொழுதுபோக்குதக் லைப் திரைப்படத்தின் சிம்புவின் கதாபாத்திரம் இதுதான்... மாஸ் காட்டும் மணிரத்னம்... பூரிப்பில் ரசிகர்கள்...

தக் லைப் திரைப்படத்தின் சிம்புவின் கதாபாத்திரம் இதுதான்… மாஸ் காட்டும் மணிரத்னம்… பூரிப்பில் ரசிகர்கள்…

- Advertisement -

பத்து தல திரைப்படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இவர் ஏற்கனவே துல்கர் சல்மானை வைத்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்னும் திரைப்படத்தை இயக்கி இருந்ததால், இந்த திரைப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

 

அதிலும் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டதால், கோலிவுட் திரையுலகமே இந்த திரைப்படத்தைப் பற்றி பேசியது. சிம்புவின் 48வது திரைப்படமாக இது உருவாக இருந்த நிலையில், படத்தின் பிரி ப்ரொடக்சன் பணிகளில் கவனம் செலுத்தி வந்தார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி.

 

ஆனால் திரைப்படம் குறித்த அடுத்த கட்ட அப்டேட் தள்ளிக் கொண்டே போனது. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் சிம்புவின் பிறந்தநாள் அன்று, படம் குறித்த தகவல் வெளியானது. வரலாற்று ரீதியில் உருவாகும் இந்த திரைப்படத்தில் சிம்பு இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து சூட்டிங் பணிகளில் தேசிங்கு பெரியசாமி கவனம் செலுத்தி வருகிறார்.

 

இந்த நிலையில்தான் சிம்புவுக்கு தக் லைப் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் நீண்ட முடியுடன் வித்தியாசமான கெட்டப்பில் சிம்பு காட்சியளிக்கிறார். இதற்கான படபிடிப்பு டெல்லி மற்றும் செர்பியா நாட்டில் நடத்தப்பட்டது. படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.

 

குறிப்பாக திரிஷா, கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், அபிராமி நாசர் உள்ளிட்ட நடித்து வருகின்றனர். இதில் கமல்ஹாசனுக்கு மகனாக சிம்பு நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எல்லை பாதுகாப்பு அதிகாரியாக அவர் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

 

அதேசமயம், சிம்பு இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும் திரைத்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது. அவர் வில்லனாகவும் இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். படத்திலேயே அவர் கதாபாத்திரம் மிக முக்கியமானதாக இருக்கும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், நிச்சயம் சிம்புவின் கதாபாத்திரம் பேசப்படும் என்று சினிமா விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

 

சற்று முன்