நடிகர் அஜீத்குமார் எச் வினோத் இயக்கத்தில் நடித்த படம் துணிவு. கடந்த ஆண்டில் ஜனவரி 14ல், பொங்கல் பண்டிகையின் போது வெளியானது. இந்த ஆண்டு பொங்கல் முடிந்து 4 மாதங்களாகியும் அஜீத் நடித்த அடுத்த படம் இன்னும் வெளிவரவில்லை. இது அஜீத்குமார் ரசிகர்களை பலத்த ஏமாற்றத்தில் தள்ளியுள்ளது.
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜீத்குமார் நடித்து வந்த விடாமுயற்சி படப்பிடிப்பு, 4 மாதங்கள் அஜர்பைஜானில் நடந்த நிலையில், அதன்பின்பு பிரேக்கப் ஆகி விட்டது. படத்தை தயாரித்த லைகா புரடக்சன்ஸ் நிதி பிரச்னை காரணமாக படத்தை டிராப் செய்துவிட்டது. இதனால் 3 மாதங்களாக அஜீத்குமார் படப்பிடிப்பில் கலந்துக்கொள்ளாமல் இருந்தார்.
அந்த 3 மாதங்களில் அப்பல்லோ மருத்துவமனையில், அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட அஜீத்குமார், பைக் ரைடும் சென்று வந்தார். பிறகு சில குடும்ப நிகழ்வுகளில் கலந்துக்கொண்டு ஓய்வாக இருந்து வந்த அவர், கடந்த 9 மற்றும் 10ம் தேதிகளில் ஐதராபாத்தில் நடந்த குட்பேட் அக்லி ஷூட்டிங்கில் கலந்துக்கொண்டார்.
ஆனால் 2 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்த நிலையில், 10ம் தேதி இரவே குட்டே் அக்லி படக்குழு, சென்னை திரும்பி விட்டது. ஏனெனில் ஆந்திராவில் தேர்தல் நடப்பதால், விறுவிறுப்பான உச்சக்கட்ட தேர்தல் பிரசாரம் ஐதராபாத்தில் நடந்ததால், ஷூட்டிங்கை தொடர்வது சிரமம் என 2 நாட்களில் படக்குழு திரும்பி விட்டது. அந்த 2 நாட்களும் அஜீத்குமார் நடித்த சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குட்பேட் அக்லி படப்பிடிப்பு மீண்டும் துவங்கி நடந்து வருகிறது. வரும் ஜூன் 7ம் தேதி வரை இந்த படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஷெட்யூலை முடித்த பிறகு, குட்பேட் அக்லி படப்பிடிப்புக்கு சில வாரங்கள் இடைவெளி விடப்படுகிறது.
இந்த இடைவெளி காலத்தில், குறிப்பிட்ட வாரங்களுக்கு விடாமுயற்சி படப்பிடிப்பில் அஜீத்குமார் கலந்துக்கொள்கிறார். அப்போது அஜீத்குமார் நடிக்க வேண்டிய காட்சிகள், திரிஷாவுடன் அவரது பாடல் காட்சிகள், மற்ற நடிகர், நடிகைகளுடன் விடுபட்ட காட்சிகள் அனைத்தையும் முடித்துவிட டைரக்டர் மகிழ்திருமேனி முடிவு செய்துள்ளார். அதன்பிறகு குட்பேட் அக்லி ஷூட்டிங்கில் மீண்டும் இணையும் அஜீத்குமார், படம் முடிவடையும் வரை அந்த படப்பிடிப்பில் தொடர்ந்து கலந்துக்கொள்கிறார்.





