- Advertisement -
Homeபொழுதுபோக்குஇளையராஜா வாழ்க்கை வரலாறு படம், இசைஞானி எடுத்த திடீர் முடிவு - அப்போ ஓல்டு இஸ்...

இளையராஜா வாழ்க்கை வரலாறு படம், இசைஞானி எடுத்த திடீர் முடிவு – அப்போ ஓல்டு இஸ் கோல்டுன்னு சும்மாவா சொன்னாங்க?

- Advertisement -

இசையமைப்பாளர் இளையராஜா, தமிழ் சினிமாவில் 47 ஆண்டுகளாக இசை சக்ரவர்த்தியாக கோலோச்சி வருகிறார். தமிழ் சினிமா இசையையும், அவரையும் பிரிக்க முடியாத அளவுக்கு பல ஆயிரம் ஹிட் பாடல்களை அவர் தந்திருக்கிறார். தமிழ் சினிமா வரலாறை, இளையராஜா பெயர் சொல்லாமல் எழுதவே முடியாது என்கிற அளவுக்கு இசையில் ஆளுமை செய்தவர் இசைஞானி.

ஆனால் இளையராஜா இசையில் எந்த அளவுக்கு வல்லவரோ, அதை விட சர்ச்சைகளில், விமர்சனங்களில் சிக்கிக் கொள்வதில் கடந்த பல ஆண்டுகளாக வல்லவராக இருந்து வருகிறார். அவரது கர்வமான பேச்சு, பல நேரங்களில் அவரது மேதாவித்தனத்தையும் கடந்து, அவரை விமர்சனங்களில் சிக்க வைத்து விடுகிறது.

சமீபத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் டீசர் வெளியானது. அதில் தனது படத்தின் இசையை பயன்படுத்தியது ஏன் என்று விளக்கம் கேட்டு, சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி பரபரப்பை கிளப்பியிருக்கிறார் இளையராஜா. அதுமட்டுமின்றி, நான் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் எனக்கு மட்டுமே சொந்தம் என காப்புரிமை கேட்டு கோ்ட்டில் வழக்கும் தொடர்ந்துள்ளார் இளையராஜா.

இந்த சூழலில், இளையராஜா வாழ்க்கை வரலாறு படம் விரைவில் உருவாகிறது. இரண்டு பாகங்களாக எடுக்கப்படும் இந்த படத்துக்கு இளையராஜா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சாணிக்காயிதம், கேப்டன் மில்லர் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்த படத்தை இயக்குகிறார். இதில் இளையராஜா கேரக்டரில் நடிகர் தனுஷ் நடிக்கிறார்.

இந்நிலையில் இளையராஜா படத்துக்கு யார் இசையமைப்பது ஏன் என்று கேள்வி எழுந்தது. ஏனெனில், இளையராஜாவின் மகன்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா இருவருமே இசையமைப்பாளர்கள் என்பதால், ஒருவேளை அப்பா படத்துக்கு மகன்களில் யாரேனும் ஒரு இசை அமைக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இளையராஜா படத்துக்கு இசை இளையராஜா தான் இசையமைப்பாளர் என முடிவானது.

ஆனால், இந்த படத்துக்கான இசை, பிஜிஎம் என எல்லாவற்றையும் தனது பழைய படங்களில் இருந்தே எடுத்து பயன்படுத்துமாறு, படக்குழுவினருக்கு இளையராஜா உத்தரவிட்டுள்ளார். மிக மிக அவசியமான இடங்களில் மட்டுமே, தான் இசையமைத்து தருவதாகவும் மற்றபடி, பழைய இசையை, மக்களிடம் வரவேற்பு பெற்ற பேக்ரவுண்ட் மியூசிக்கை பயன்படுத்துங்கள் என அறிவுறுத்தியிருக்கிறார் இளையராஜா. தனது பழைய இசை போல, சமீபத்திய இசை இல்லை என்பதையே இளையராஜாவே புரிந்திருப்பதால், இப்படி ஒரு முடிவை அவர் எடுத்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

சற்று முன்