- Advertisement -
Homeபொழுதுபோக்குஅருள்நிதியை 3 வருடங்கள் குத்தகைக்கு எடுத்த டிமாண்டி காலனி இயக்குனர், இவ்வளவு பெருசாவா பிளான் போடுறது?

அருள்நிதியை 3 வருடங்கள் குத்தகைக்கு எடுத்த டிமாண்டி காலனி இயக்குனர், இவ்வளவு பெருசாவா பிளான் போடுறது?

- Advertisement -

அருள்நிதி நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “டிமாண்டி காலனி”. இத்திரைப்படம் வேற லெவல் ஹாரர் திரைப்படமாக வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். அஜய் ஞானமுத்து “டிமாண்டி காலனி” வெற்றியை தொடர்ந்து “இமைக்கா நொடிகள்” திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஆனால் அத்திரைப்படம் சரியாக போகவில்லை.

அதன் பின் விக்ரமை வைத்து “கோப்ரா” திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் இத்திரைப்படம் படுதோல்வியடைந்தது. ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் உலகளவில் வெறும் ரூ.40 கோடிகளே வசூல் செய்தது. இத்திரைப்படத்தின் திரைக்கதை மிகவும் குழப்பமான திரைக்கதையாக அமைந்தது. ஆதலால் “கோப்ரா” திரைப்படத்தை ரசிகர்களை கவர்ந்திழுக்கவில்லை.

- Advertisement -

நாம் ஒரு வெற்றி இயக்குனராக மீண்டும் ஜொலிக்க வேண்டும் என்று முடிவெடுத்த அஜய் ஞானமுத்து, தற்போது “டிமாண்டி காலனி 2” திரைப்படத்தை கையில் எடுத்திருக்கிறார். இத்திரைப்படத்தில் அருள்நிதி ஹீரோவாக நடிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது.

இந்த நிலையில் இத்திரைப்படத்தை குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படத்தின் இயக்குனரான அஜய் ஞானமுத்து “டிமாண்டி காலனி 3”, “டிமாண்டி காலனி 4” போன்ற பாகங்களுக்கான கதையை தயார் செய்து வைத்திருக்கிறாராம். “டிமாண்டி காலனி 2” திரைப்படத்திலேயே அடுத்த இரண்டு பாகங்களுக்கான Lead-கள் இருக்கிறதாம்.

- Advertisement -

அதே போல் “டிமாண்டி காலனி 3” வருகிற 2024 ஆம் ஆண்டிலும் “டிமாண்டி காலனி 4” வருகிற 2025 ஆம் ஆண்டிலும் வெளியிட இயக்குனர் அஜய் ஞானமுத்து திட்டம் வைத்திருக்கிறாராம். இத்தகவலை வலைப்பேச்சு பிஸ்மி தனது வீடியோவில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

- Advertisement -

சற்று முன்