நடிகர் விஜய் இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தின் டீ ஏஜிங் தொழில்நுட்ப காட்சிகளுக்காக சமீபத்தில் அமெரிக்கா சென்று திரும்பிய நடிகர் விஜய், ஜூலை மாதம் இந்த படத்தின் 2ம் கட்ட டப்பிங்கை வருகிற ஜூலை மாதத்துக்கு தள்ளி வைத்திருக்கிறார்.
ஜூன் மாதம் முழுவதும் தனது சொந்த பணிகளுக்காக ஒதுக்கியுள்ள நடிகர் விஜய், இந்த மாதம் முழுவதும் தனது அரசியல் சார்ந்த பணிகளுக்காக திட்டமிட்டுள்ள விஜய், புஸ்லி ஆனந்துடன் அரசியல் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார். இதுவரை உறுப்பினர் சேர்க்கை, 2 கோடி உறுப்பினர் இலக்கு திட்டமிடலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் கட்சி நிர்வாகிகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்தவும் ஆலோசனை நடத்தி வருகிறார். ஏற்கனவே கடந்த மே மாதம் இந்த மாநாட்டை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் காரணமாக, அது நடக்க முடியாமல் போனது. அதனால் வருகிற ஜூன் மாதம் நடத்துவது குறித்து விஜய் ஆலோசித்து வருகிறார்.
அதே போல் சமீபத்தில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், கடந்த ஆண்டை போலவே மாணவ மாணவியருக்கு இந்த முறைகள் ரொக்கப் பரிசுகள் வழங்க விஜய் ஆயத்தமாகி உள்ளார். அதற்கான தேதியும், இடமும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. வழக்கம்போல முதல் 3 இடங்களை பெற்றவர்களுக்கு முறையே ரூ. 25 ஆயிரம், ரூ. 15 ஆயிரம், ரூ. 10 ஆயிரம் என வழங்க உள்ளார்.
இந்நிலையில் வருகிற ஜூன் 22ம் தேதி விஜய் 50வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தின் செகன்ட் சிங்கிள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல், அவரது அடுத்த படமான விஜய் 69 படத்தின் முக்கிய அறிவிப்பும் வெளியாக இருக்கிறது. எனவே, இந்த நாளில் பல சிறப்பு சம்பவங்கள் நடக்க இருக்கிறது.
அதனால் விஜய் ரசிகர்கள் தரப்பிலும், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விஜய் 50 என்று டிவிட்டரில் டிரண்டிங் ஆகி வருகிறது. இதில் விஜய் புகைப்படங்கள், அவர் நடித்த படக்காட்சிகள் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன. அதனால் விஜய் 50 நிறைய எதிர்பார்ப்புகளை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது.





