- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடுத்த படத்தை ரிலீஸ் செய்ய மிகப்பெரிய இடைவெளி... நின்று போன வணங்கான்... சிக்கலில் சுதா கொங்கரா...

அடுத்த படத்தை ரிலீஸ் செய்ய மிகப்பெரிய இடைவெளி… நின்று போன வணங்கான்… சிக்கலில் சுதா கொங்கரா படம்… என்னதான் செய்கிறார் சூர்யா…

- Advertisement -

நடிகர் சூர்யாவின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 800 நாட்களை கடந்து விட்டது. 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவர் நடிப்பில், எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியானது. பாண்டிராஜ் இயக்கிய இந்த திரைப்படம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்களை பேசியது.

 

ஆனால் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. கலவையான விமர்சனத்தை பெற்றதால் அந்த திரைப்படம் வசூலிலும் சோபிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து இயக்குனர் பாலாவிடம் கைகோர்த்த சூர்யா வணங்கான் படத்தில் நடிக்க ஆரம்பித்தார். இதனை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரித்தது.

 

கன்னியாகுமரியில் இதற்கான பணிகள் தொடங்க, சூட்டிங்கின்போது சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே உரசல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, வணங்கான் படத்தில் நடிப்பதில் இருந்து பின்வாங்கினார் சூர்யா. படம் குறித்து அறிக்கை வெளியிட்ட பாலா, பிதாமகன் போல் நந்தா போல் ஒரு படத்தில் மீண்டும் இணைவோம் என்று கூறி இருந்தார்.

 

இதனைத் தொடர்ந்து வணங்கான் திரைப்படம் அருண் விஜயிடம் சென்றது. இந்தப் பக்கம் சூர்யா சிறுத்தை சிவா உடன் கைகோர்த்தார். மறுபிறவியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு கங்குவா என பெயர் வைக்கப்பட்டது. சூர்யா நடித்த திரைப்படங்களிலேயே மிகப்பெரிய பொருட்செலவில் இந்த படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

 

தனது மற்ற திரைப்படங்களில் மிக விரைவாக படப்பிடிப்பை நடத்தி முடிக்கும் சிறுத்தை சிவா இந்த திரைப்படத்திற்காக மட்டும் கிட்டத்தட்ட ஒன்றை ஆண்டுகளை செலவிட்டிருக்கிறார். தற்போது ஷூட்டிங் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், போஸ்ட் ப்ரடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இன்னும் கங்குவா படத்தின் ரிலீஸ் செய்தியை உறுதி செய்யவில்லை.

 

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வெளியான சூர்யாவின் வாடிவாசல் அறிவிப்பும், இன்னும் அறிவிப்போடு இருக்கிறது. இதேபோல் சுதா கொங்கரா உடன் சூர்யா இணைய இருந்த புறநானூறு திரைப்படமும் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இப்படி அடுத்தடுத்து ஒரே நெகட்டிவ் விஷயங்கள் இருப்பதால் சூர்யா ரசிகர்கள் சோர்ந்து போயிருக்கிறார்கள். 800 நாட்களை தாண்டி இன்னும் அவரின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாத சூழலில், அடுத்த திரைப்படத்தையும் அவர் இழுத்தடிப்பது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் உடன் அவர் ஒப்புக் கொண்டிருக்கும் படத்தையாவது விரைவில் முடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

 

சற்று முன்