- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடுத்தடுத்து உயர் ரக கார்களை வாங்கி குவிக்கும் அஜித்குமார்... புகைப்படம் வெளியிட்டு மகிழ்ச்சி அடைந்த ஷாலினி......

அடுத்தடுத்து உயர் ரக கார்களை வாங்கி குவிக்கும் அஜித்குமார்… புகைப்படம் வெளியிட்டு மகிழ்ச்சி அடைந்த ஷாலினி… வைரலாக்கும் அஜித் ரசிகர்கள்…

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார் அஜித் குமார். மற்ற நடிகர்கள் திரைப்படம் வெளியாகும் போது ஒரு வாரத்திற்கு அது வசூலிக்கப்படும் தொகையை, வெறும் இரண்டே நாட்களில் அஜித் திரைப்படம் பெற்றுவிடும். இதற்குக் காரணம் அத்தனை இளைஞர் பட்டாளத்தை அஜித் தன் கையில் வைத்திருப்பது தான்.

 

- Advertisement -

ரசிகர் மன்றம் வேண்டாம், அடைமொழி வேண்டாம் என பொது வாழ்க்கையில் இருந்து அவர் ஒதுங்கியே இருந்தாலும் அவரை ரசிகர்கள் விடுவதாக இல்லை. சமூக வலைதளங்கள் உட்பட எதிலுமே ஆர்வம் காட்டாத அஜித்குமாரை தான் இங்கு ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

 

- Advertisement -

இத்தனைக்கும் படத்தையும் அவ்வளவு விரைவாக கொடுக்காமல், அஜித் தனக்கு பிடித்தமான செயல்களில் ஈடுபட்டு வர, அதையும் அவரது ரசிகர்கள் டிரெண்டாக்குவார்கள். தமிழ் சினிமாவில் இப்படி ரசிகர்கள் ஒரு நடிகரை கொண்டாடுவது போல் வேறு எந்த ஒரு நடிகருக்கும் இல்லை என்று தான் கூற வேண்டும்.

 

அந்த அளவுக்கு, அஜித் படை பலத்துடன் இருப்பதால் அவருக்கு என ஒரு தனி மார்க்கெட் இங்கு உள்ளது. கடந்த ஆண்டு பொங்கலுக்கு துணிவு திரைப்படத்தை வெளியிட்ட அஜித், இப்போது வரை எந்த ஒரு படத்தையும் முழுமையாக முடிக்கவில்லை. விடாமுயற்சி, குட் பேட் அக்லி என இரண்டு படங்களில் மட்டும் அவர் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.

 

இதில் முதலில் குட் பேட் அக்லி திரைப்படம் தான் திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார்கள். சொன்னபடி படத்தை ரிலீஸ் செய்ய படத்தின் இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன், விறுவிறுப்பாக பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

 

இது ஒரு பக்கம் இருக்க அஜித்தும், அவ்வப்போது வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் அவர் உயர்ரக வகையைச் சேர்ந்த porche ஜிடி3 ஆர்எஸ் காரை வாங்கி இருக்கிறார். இதன் மதிப்பு மட்டும் நான்கு கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. கடந்த மாதம் தான் அவர், ஒன்பது கோடி ரூபாய் மதிப்பில் ஃபெராரி காரை வாங்கி இருந்தார். ஏற்கனவே கார் ரேஸில் அதீத ஆர்வம் காட்டும் அஜித் குமார் தற்போது, அதற்காக புது ரக கார்களை வாங்கி வருவதாக சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்