- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் தமிழோடு இருக்க நினைக்கிறேன், நான் அதற்கு பிறந்தவன் அல்ல - இளையராஜா குறித்த கேள்விக்கு...

நான் தமிழோடு இருக்க நினைக்கிறேன், நான் அதற்கு பிறந்தவன் அல்ல – இளையராஜா குறித்த கேள்விக்கு பட்டென பதில் சொன்ன கவிஞர் வைரமுத்து

- Advertisement -

கடந்த 38 ஆண்டுகளாக இளையராஜா – வைரமுத்து பிரிவு நீடித்து வருவது தமிழ் சினிமா உலகம் அறிந்த ஒன்றுதான். இப்போது இளையராஜா, நான் இசையமைத்த பாடல்கள் எனக்கே சொந்தம் என கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அவரது பாடல்களை படங்களில் பயன்படுத்தினால், படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வருகிறார்.

சில வாரங்களுக்கு முன், படிக்காத பக்கங்கள் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற கவிஞர் வைரமுத்து, பாடல் வரிகளும், இசையும் ஒன்று சேர்ந்ததுதான் பாட்டு. இதைக்கூட அறியாதவன் அஞ்ஞானி என குறிப்பிட்டு பேசியிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த கங்கை அமரன், வைரமுத்து நல்ல மனிதரே இல்லை என்று வீடியோ வெளியிட்டது வைரலானது.

- Advertisement -

இதற்கிடையே ரஜினிகாந்த் நடிக்க உள்ள கூலி படத்தின் டீசரில் தனது பாடல் இசை பயன்படுத்தியதற்காக விளக்கம் கேட்டு சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி, பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் இளையராஜா. மேலும் மஞ்சும்மெல் பாய்ஸ் படத்துக்கும் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த கவிஞர் வைரமுத்து, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது முடிந்த கதை தொடங்க வேண்டாம் என, இளையராஜா குறித்த கேள்விகளை தவிர்க்குமாறு முன்னதாக வைரமுத்து வேண்டுகோள் வைத்தார். அதுகுறித்து பேசுவது பண்பாட்டு நாகரிகத்துக்கு உகந்தது அல்ல என்றும் கூறி முற்றுப்புள்ளி வைத்தார்.

- Advertisement -

ஆனால் செய்தியாளர்கள் விடாப்பிடியாக இளையராஜா சார்ந்த கேள்விகளை முன்வைக்க, சற்று கோபமடைந்த கவிஞர் வைரமுத்து, இந்த செய்திகளை நீங்கள் தவிர்க்க மறுக்கிறீர்கள். நான் எந்த மேடையிலும் சர்ச்சையான கருத்துகளை உண்டாக்க விரும்பவில்லை. நான் சர்ச்சைக்கு பிறந்தவன் இல்லை. சர்ச்சைகள் உருவாக்கப்படுகின்றன. உண்டாக்கப்படும் சர்ச்சைகளில் இருந்து நான் வெளியேறவே விரும்புகிறேன்.

ஆனால் காலம் சர்ச்சைகளை முடித்துவைக்க விரும்பவில்லை என்றுதான் தெரிகிறது. இந்த சமூகம், சர்ச்சைகளை உருவாக்கிக் கொண்டு அதில் குளிர்காய நினைக்கிறது. ஆனால் தனி மனிதர்கள், சர்ச்சைகளை விட்டு தள்ளி நிற்கவே ஆசைப்படுகின்றனர். நான் தமிழோடு இருக்க நினைக்கிறேன். சர்ச்சைகளில் இருந்து விலக நினைக்கிறேன், என்று கூறினார்.

- Advertisement -

சற்று முன்