- Advertisement -
Homeபொழுதுபோக்குமலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மகன் இப்படி ஒரு வேலையில் இருக்கிறாரா… சம்பளமும் இல்லையா? -...

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மகன் இப்படி ஒரு வேலையில் இருக்கிறாரா… சம்பளமும் இல்லையா? – என்ன கொடும சார் இது?

- Advertisement -

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் மோகன்லால். தமிழிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக மணிரத்னம் இயக்கத்தில் இருவர், கமலுடன் உன்னைப் போல் ஒருவன், விஜயுடன் ஜில்லா உள்ளிட்ட படங்களில் மோகன் லால் நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

அத்துடன் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்துடன் கேமியோ ரோலில் மோகன்லால் நடித்திருந்தார். ஜெயிலர் 2 படத்தில் மோகன்லாலுக்கு அதிக காட்சிகள் வரும்படி, படத்தில் அவரது கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் தரும் நிலையில் கதையை உருவாக்கி உள்ளார் நெல்சன் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

மேலும் புலி முருகன், காப்பான், மரக்கர் அரபிக் கடலின் சிங்கம் போன்ற படங்களிலும் மோகன்லால் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 30 ஆண்டுகளுக்கு முன், கார்த்திக் நடித்த கோபுர வாசலிலே படத்தில் கேளடி என் பாவையே, ஆடவன் உன் தேடையே என்ற பாடல் காட்சியில் கேமியோ ரோலில் மோகன்லால் நடித்திருந்தார்.

பொதுவாக சினிமா நடிகர்களின் வாரிசுகள் என்றாலே பெரும்பாலும் அப்பாவை போல, அம்மாவை போல சினிமாவில் அவர்களும் நடிக்கவே விரும்புவார்கள். அல்லது இயக்குனராக மாற ஆசைப்படுவார்கள். ஏதேனும் ஒரு விதத்தில் தந்தையை போல, கலைவாரிசாக சினிமாவில் சாதிப்பதே அவர்களது லட்சிய கனவாக இருக்கும்.

- Advertisement -

மலையாள நடிகர் மோகன்லால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கே பாலாஜி மகள் சுசித்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். இந்த தம்பதிக்கு விஸ்வமயா மோகன்லால் என்ற மகளும், பிரணவ் மோகன்லால் என்ற மகனும் உள்ளனர். சமீபத்தில் ஒரு மலையாள யூடியூப் சேனலில் நேர்காணலில் பங்கேற்ற சுசித்ரா மோகன்லால், தன் குடும்பம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அந்த நேர்காணலில் சுசித்ரா மோகன்லால் கூறுகையில், எங்களது மகன் அப்பு ( பிரணவ்) ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு விவசாய பண்ணையில் வேலை செய்கிறார். தங்குமிடம், உணவு என எதற்காகவும் சம்பளம் வாங்காமல் அவர் வேலை செய்து வருகிறார். வீட்டுக்கு வரும்போது அந்த அனுபவங்களை பகிர்ந்துக்கொள்வார் என்று கூறியிருக்கிறார். ஹிருதயம், வர்ஷங்கல்க்கு ஷேஷம் ஆகிய படங்களில் பிரணவ் மோகன்லால் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

- Advertisement -

சற்று முன்