- Advertisement -
Homeபொழுதுபோக்கு15 நாட்களாக ஷூட்டிங் வர மறுத்த நடிகர் கார்த்தி, கெஞ்சி கூத்தாடி மீண்டும் அழைத்து வந்த...

15 நாட்களாக ஷூட்டிங் வர மறுத்த நடிகர் கார்த்தி, கெஞ்சி கூத்தாடி மீண்டும் அழைத்து வந்த படத்தயாரிப்பாளர் – ஷூட்டிங் ஸ்பாட்டில் பரபர!

- Advertisement -

நடிகர் கார்த்தி, நடிகர் சிவக்குமாரின் இளைய மகன். நடிகர் சூர்யாவின் சொந்த தம்பி என்பது தமிழ் சினிமா ரசிகர்கள் அறிந்த செய்திதான். ஆனால் பருத்தி வீரன் படத்தில் நடித்த போது, சிவக்குமார், சூர்யா என்ற அடையாளங்களை கடந்து, அவரை ஒரு மாஸ் ஹீரோவாக ஜெயிக்க வைத்தவர்தான் டைரக்டர் அமீர். அந்த வகையில், இப்போதும் கார்த்திக்கு மிகப்பெரிய அடையாளமாக இருப்பது பருத்தி வீரன்தான்.

கடந்த ஆண்டில் தீபாவளி பண்டிகைக்கு, இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்த 25வது படம் ஜப்பான் வெளியானது. கார்த்தி அதுவரை நடித்த படங்களிலேயே மிக மிக மோசமான ஒரு பிளாப் படமாக அது அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்தி ரசிகர்களே அதிர்ச்சியடையும் அளவுக்கு ஒரு பிளாப் படமாக ஜப்பான் இருந்தது.

இந்த தோல்வியை விரட்டும் விதமாக இப்போது 2 படங்களில் அதிக நம்பிக்கை வைத்து நடிகர் கார்த்தி நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது பிறந்த நாளின் போது அந்த படங்களில் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் ஒரு படம் மெய்யழகன், மற்றொரு படம் வா வாத்தியாரே என்ற 2 படங்களும்தான்.

இதில் வா வாத்தியாரே படம், வாவா என சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் கார்த்தி, எம்ஜிஆரின் தீவிர ரசிகராக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆறு மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் நிலையில், இன்னும் ஷூட்டிங் போய்க்கொண்டே இருக்கிறது. இன்னும் படத்தின் பெரும்பாலான காட்சிகள் மீதம் இருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது இந்த படத்தின் டைரக்டர் நலன் குமாரசாமி, தினமும் 11 மணிக்கு தான் ஷூட்டிங் வருகிறார். தினமும் படக்காட்சிகளை மிகவும் மெதுவாக ஷூட்டிங் செய்கிறார். ஒரே காட்சிகளை திரும்ப திரும்ப எடுப்பதும் அவரது வழக்கமாக இருக்கிறது. இதனால் பல நாட்கள் கடந்தாலும், படம் அடுத்த கட்டத்தை நோக்கி நகராமல், ஒரு ஒரு காட்சியாக எடுத்து வருகிறார் நலன் குமாரசாமி என்று கூறப்படுகிறது.

இதனால் பொறுமை இழந்த படத்தின் கதாநாயகன் கார்த்தி, இப்படியே இவர் தினமும் ஒரு ஒரு காட்சியாக படப்பிடிப்பில் எடுத்துக்கொண்டு இருந்தால், எப்போது படத்தை முடிப்பது என மனம் வெறுத்துப் போய், 15 நாட்களாக ஷூட்டிங் மறுத்து வீட்டிலேயே இருந்திருக்கிறார். அதன்பிறகு படத்தின் தயாரிப்பாளர் சென்று கார்த்தியிடம் சமாதானம் பேசி மீண்டும் படப்பிடிப்புக்கு அழைத்து வந்திருக்கிறார். படத்தை இயக்கி வரும் நலன்குமாரசாமி, பணக்கார வீட்டு பிள்ளை என்பதால், இப்படி படப்பிடிப்பில் அலட்சியம் காட்டுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு நிலவுகிறது.

சற்று முன்