- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்தமானில் தொடங்கிய ஷுட்டிங்... படத்தின் நட்சத்திரங்கள் குறித்து அடுத்தடுத்த அப்டேட்... கலக்கும் கார்த்திக் சுப்புராஜ்... திருப்தியில்...

அந்தமானில் தொடங்கிய ஷுட்டிங்… படத்தின் நட்சத்திரங்கள் குறித்து அடுத்தடுத்த அப்டேட்… கலக்கும் கார்த்திக் சுப்புராஜ்… திருப்தியில் சூர்யா ரசிகர்கள்…

- Advertisement -

நடிகர் சூர்யாவிற்கு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இரண்டு வருடங்களை தாண்டி விட்டது. வணங்கான் திரைப்படத்திலிருந்து பாதியில் வெளியேறியது, கங்குவா திரைப்படத்திற்காக ஒன்றரை வருடங்களை செலவிட்டது என அடுத்தடுத்த கமிட்மென்ட்களால் சூர்யாவிற்கு படங்கள் ஏதும் வெளியாகவே இல்லை.

 

இந்த நிலையில் அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு, கடந்த ஆண்டு வெளியானது. அதில் சுதா கொங்கராவுடன் சூர்யா இரண்டாவது முறையாக இணைவதாக கூறப்பட்டது. இதில் துல்கர் சல்மான் நஸ்ரியா நசீம் விஜய் வர்மா உள்ளிட்டோர் நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதாவது இந்தி திணிப்பை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்படுவதாக சினிமா விமர்சகர்கள் தெரிவித்தனர்.

 

படத்திற்கும் புறநானூறு என டைட்டில் வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சூட்டிங் வெகு விரைவில் ஆரம்பமாகும், மதுரை திருச்சி சிதம்பரத்தில் இந்த திரைப்படம் எடுக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் திடீரென சூர்யாவிற்கும் சுதா கொங்கராவிற்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பால் படம் அடுத்த கட்டத்திற்கு செல்லவில்லை.

 

பருத்திவீரன் திரைப்படம் தொடர்பாக ஞானவேல் ராஜா மற்றும் இயக்குனர் அமீருக்கு இடையேயான பிரச்சனையில் சுதா கொங்கரா ஒரு விளக்கம் வெளியிட்டது தான் இதற்கு காரணம் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. இருப்பினும் புறநானூறு இன்னும் தொடர்வதாகவே இரு தரப்பில் இருந்தும் வரும் தகவல்கள் நமக்கு தெரிவிக்கின்றன.

 

இருப்பினும் சூர்யா தனது அடுத்த திரைப்படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். அவருக்கு புறநானூறு 43வது திரைப்படமாக உருவாக இருந்த நிலையில், 44-வது திரைப்படத்திற்காக அவர் கார்த்திக் சுப்புராஜ் உடன் கைகோர்த்து இருக்கிறார். யாருமே எதிர்பாராத நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியானது. இதற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.

 

படத்தின் அறிவிப்பு தொடர்பான போஸ்டரில், love laughter war என எழுதப்பட்டிருந்தது. அந்தமானில் இதன் சூட்டிங் இன்று தொடங்கி இருக்கிறது. சூர்யாவின் 2டி நிறுவனமே இதனை தயாரிக்கும் நிலையில், படத்தில் நடிக்க உள்ள நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோக, ஜெயராம், நகைச்சுவை நடிகர் கருணாகரன், மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர். இதில் ஜோஜு ஜார்ஜ் ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜின் ஜகமே தந்திரம் திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

சற்று முன்