- Advertisement -
Homeபொழுதுபோக்கு300 ரூபாய் சம்பளம் கம்மி, போலீஸ் எஸ்ஐ வேலை வேண்டாம் என்று அந்த வேலைக்கு போனவன்...

300 ரூபாய் சம்பளம் கம்மி, போலீஸ் எஸ்ஐ வேலை வேண்டாம் என்று அந்த வேலைக்கு போனவன் நான் – நடிகர் ஜெயராம் சொன்ன ஆச்சரியமான தகவல்!

- Advertisement -

மலையாள சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவர் ஜெயராம். அவர் மலையாளத்தில் மட்டுமின்றி தமிழிலும் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக கோகுலம் தெனாலி பஞ்ச தந்திரம் முறைமாமன் கோலங்கள் பிரியங்கா துப்பாக்கி புருஷ லட்சணம் பொன்னியின் செல்வன் 1 பொன்னியின் செல்வன் 2 தி கோட் என தமிழில் பல படங்களில் ஜெயராம் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் பரிமளா அண்ட் கோ என்ற படத்தில் ஜெயராம் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஊர்வசி நடித்திருந்தார். மலையாளத்தில் ஏராளமான படங்களில் இருவரும் ஜோடியாக நடித்த நிலையில், 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இருவரும் இந்த படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது

- Advertisement -

காமெடி கலந்த ஹீரோ கேரக்டரில் ஜெயராம் நடித்த பல படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருக்கின்றன. இவர் ஒரு சென்டை மேள இசைக்கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கேரளாவில் விவசாய பண்ணை பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இதுவரை 3 முறை சிறந்த விவசாயி என்ற கேரளம் அரசின் மாநில விருதுகளை ஜெயராம் பெற்றிருக்கிறார்.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் ஜெயராம் கூறியதாவது, முதலில் நான் டிகிரி படிப்பை முடித்தவுடன் கேரளா ஆர்ம்டு போலீஸில் திருச்சூரில் அங்கே சப் இன்ஸ்பெக்டர் வேலைக்கு டெஸ்ட் எழுத போனேன். நான் என்சிசியில் இருந்ததும் உயரமாக இருந்தததும் அதற்கு ஒரு முக்கிய காரணம்.

- Advertisement -

அதில் எனக்கு பணிவாய்ப்பு கிடைத்து விட்டது. ஆனால் அதே நாளில் ஒரு மெடிக்கல் கம்பெனியில் எனக்கு மெடிக்கல் ரெப்பரசன்டேடிவ் வேலையும் கிடைத்து விட்டது. இதையும் அதையும் கம்பேர் செய்து பார்த்தால் எஸ்ஐ வேலையை விட மெடிக்கல் ரெப்பரசன்டேடிவ் சம்பளம் 300 ரூபாய் ஜாஸ்தி.

அந்த வேலைக்கு போனால் ஸ்கூட்டரும் கிடைக்கும் ஓட்டலாம் என்பதால் அந்த ரெப்பரசன்டேடிவ் வேலைக்கு போனேன். இல்லேன்னா போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வேலைக்கு போயிருப்பேன். அப்போதுதான் கெமிக்கல் கம்பெனி ஒன்றில் மார்க்கெட்டிங் எக்ஸிகியூடிவ் வேலை பார்த்தேன். அது ஒரு அமெரிக்கன் கம்பெனி என்று அந்த நேர்காணலில் நடிகர் ஜெயராம் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்