- Advertisement -
Homeபொழுதுபோக்குசிவகார்த்திகேயன் வீட்டில் மீண்டும் குவா... குவா... சத்தம்... தம்பதியருக்கு வாழ்த்து கூறும் திரையுலகம்...

சிவகார்த்திகேயன் வீட்டில் மீண்டும் குவா… குவா… சத்தம்… தம்பதியருக்கு வாழ்த்து கூறும் திரையுலகம்…

- Advertisement -

சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவருக்கென தமிழ் சினிமாவில் தனி மார்க்கெட்டே இருக்கிறது என்று கூறலாம். சமீப காலங்களாக படத்துக்கு படம் அவர் வித்தியாசம் காட்டி வருகிறார். அவர் சோதனை முயற்சியாக நடித்த மாவீரன் திரைப்படத்தை இதற்கு உதாரணமாக கூறலாம்.

 

- Advertisement -

தற்போது சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ரங்கூன் படத்தை எடுத்த ராஜ்குமார் பெரியசாமி தான் இதனை இயக்கியிருக்கிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இதனை தயாரித்துள்ளது. இந்த படத்தில் முழுக்க முழுக்க முழுக்க தனது கதாபாத்திரத்திற்கு வித்தியாசம் கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

 

- Advertisement -

ராணுவ வீரராக நடித்திருக்கும் அவர் இதற்காக, கடுமையாக உடற்பயிற்சி செய்து உள்ளார். மேஜர் முகுந்தனின் வாழ்க்கையை தான் இந்த திரைப்படம் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் கதாநாயகியாக சாய் பல்லவி நடித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

 

இந்தத் திரைப்படம் ஜூலை மாதம் அல்லது ஆகஸ்ட் மாதம் வெளியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது ஏ ஆர் முருகதாஸ் படத்தில் சிவகார்த்திகேயன் பிஸியாக நடித்து வருகிறார். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இதன் சூட்டிங் நடைபெற்று வருகிறது. இதில் சிவகார்த்திகேயனுக்கு கல்லூரி மாணவர் கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது.

 

திரையுலகம் தாண்டி தனது குடும்பத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் சிவகார்த்திகேயன். பொதுவாக தனது நண்பர் அல்லது உறவினர் நிகழ்ச்சிக்கு செல்லும் போது அவர் குடும்பத்துடன் தான் செல்வார். சமீபத்தில் அப்படி ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி கர்ப்பிணியாக இருப்பது தெரிய வந்தது. இந்த நிலையில் தற்போது அவர்களுக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

 

இதனை சிவகார்த்திகேயனை அறிவித்துள்ளார். தங்களுக்கு நேற்று இரவு ஆண் குழந்தை பிறந்ததை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாகவும், ஆர்த்தியும் குழந்தையும் நலமுடன் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஆராதனாவிற்கும், குகனுக்கும் நீங்கள் தந்த அன்பையும், ஆசியும் எங்களது மூன்றாவது குழந்தைக்கும் தர வேண்டுவதாக சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார். இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஆர்த்தி தம்பதியருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்