‘மண்டேலா’ படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம் ‘மாவீரன்’. இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘மாவீருடு’ என்று பெயர் வைத்துள்ளன. இந்த திரைப்படத்தில் இயக்குனர் சங்கர் மகள் அதிதி சங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த திரைப்படம் நேற்று வெளியானது.

சமூகத்தில் பல நெருக்கடிக்கு தள்ளப்பட்டாலும் தனது கோழைத்தனத்தால் அனைத்திற்கும் பின்வாங்கும் இளைஞர், ஒரு கட்டத்தில் மாவீரன் ஆவது எப்படி கதைக்களமாக கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளது. மாவீரன் பட வசூல் விவரம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் உருவான நிலையில், நேற்று மட்டும் உலகம் முழுவதும் 13 கோடி ரூபாய் வசூல் ஈட்டி இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் தொடர்ந்து மாவீரன் படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதுவதால் தொடர்ந்து மாவீரன் திரைப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ‘மாவீரன்’ திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து இயக்குனர் ஷங்கர் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இயக்குநர் சங்கர் வெளியிட்டுள்ள அந்த பதிவில், “மாவீரன் திரைப்படம் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது.
இயக்குனர் மடோன் அஸ்வினின் திறமை சினிமாவில் நிலைத்து நிற்பார் என்பதை காட்டுகிறது. மாஸான சிறந்த பொழுதுப்போக்கு படம். சிவகார்த்திகேயன் பாராட்டுக்குரிய நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதிதி கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார். மிஷ்கின், சரிதா, யோகிபாபு சிறப்பாக நடித்துள்ளனர். இவ்வாறு பதிவிட்டுள்ளார். பிரம்மாண்ட இயக்குநர் என அழைக்கப்படும் சங்கர் மாவீரன் படத்தை பாராட்டியுள்ளது படக்குழுவினரை உற்சாகம் அடைய செய்துள்ளது.





