- Advertisement -
Homeபொழுதுபோக்குகட்சியும் இல்லே, ஒரு கொடியும் இல்லே - ஆனாலும் எப்போதும் ரசிகர்களின் தலைவராக மாஸ் காட்டும்...

கட்சியும் இல்லே, ஒரு கொடியும் இல்லே – ஆனாலும் எப்போதும் ரசிகர்களின் தலைவராக மாஸ் காட்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வந்த திடீர் அழைப்புகள்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த், கடந்த 45 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வெற்றிப் பாதையில் பவனி வருகிறார். 73 வயதிலும் 23 வயது இளைஞர் போல சுறுசுறுப்பு காட்டுகிறார். இப்போது தனது 170வது படம் வேட்டையன் படத்தை முடித்துள்ள ரஜினிகாந்த், சமீபத்தில் ஒரு வார ஆன்மீக பயணமாக இமயமலைக்கு சென்று திரும்பியிருக்கிறார்.

இன்னும் சில தினங்களில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கூலி படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. இந்த படத்துக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இந்த படத்தில் தெலுங்கு நடிகர் பாலய்யாவும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த், இந்த படங்களை தவிர மேலும் 3 படங்களில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். இதற்காக வேல்ஸ் தயாரிப்பு நிறுவன தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட், சத்யஜோதி பிலிம்ஸ், சன்பிக்சர்ஸ் உள்ளி்ட்டோரிம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அதில் 3 படங்களுக்கு ரஜினி ஓகே சொல்லி கமிட் ஆகிவிட்டதாக தெரிய வந்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த பல ஆண்டுகளாகவே ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்களும், பொதுமக்கள் நிறைய ஆர்வம் காட்டினர். ஆனால் ஆண்டவன் சொன்னால் நிச்சயம் வருவேன் என்று சொன்ன ரஜினிகாந்த், கடைசி வரை அரசியலுக்கு வரவில்லை. ஆனால் யாருமே எதிர்பார்க்காத நிலையில், கமல்ஹாசன் மக்கள் நீதிமய்யம் என்ற அரசியல் கட்சியை துவங்கினார். இப்போது நடிகர் விஜயும் அரசியல்வாதி ஆகி விட்டார்.

- Advertisement -

எனினும் அரசியல் செல்வாக்கை காட்டிலும், ரசிகர்கள் செல்வாக்கில் ரஜினிகாந்த் தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறார். இப்போதும் 73 வயதில் ஹீரோவாக நடித்து, பல நூறு கோடிகளை வசூலில் அள்ளுகிறார். அதனால், அரசியல்வாதிகள் தங்களது விழாக்களில் ரஜினிகாந்த் நேரில் பங்கேற்பதே தங்களுக்கு மிகப்பெரிய கவுரவம் என்று கருதுகின்றனர். ரஜினிகாந்தை அழைத்து அவரை மரியாதை செய்கின்றனர்.

அந்த வகையில், நாளை இரவு டெல்லியில் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியமைக்கிறது. இதற்கான மோடி பதவியேற்பு விழாவில் விருந்தினராக பங்கேற்க ரஜினிகாந்துக்கு அழைப்பு வந்துள்ளது. அதே போல் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி முதல்வராக சந்திரபாபு நாயுடு, வரும் 12ம் தேதி பதவியேற்கிறார். அந்த விழாவிலும் சிறப்பு விருந்தினராக பங்கேற்குமாறு, ரஜினிகாந்துக்கு அவரது நண்பரும், கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்