இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடித்து வரும் ட்ரெயின். இந்த படம் மேட்டுப்பாளையம் முதல் சென்னை வரும் ரயிலில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு படம். சில மாதங்களாக பூந்தமல்லியில் ரயில்வே செட் அமைத்து, அங்கு படப்பிடிப்பு முழுவதும் நடத்தப்பட்டது.
இதற்கிடையே கடந்த வாரத்தில், கோவையை அடுத்துள்ள மேட்டுப்பாளையத்தில் ரயில்வே டிராக்கில் இந்த படத்தின் சில காட்சிகள் படமாக்கப்பட்டது. அப்போது ஷூட்டிங் பார்க்க திரண்ட கூட்டத்தை மைக்கில் தனது பாணியில் மிஷ்கின் கண்டபடி பேசியதால், பரபரப்பு ஏற்பட்டு, அந்த விஷயம் சமூக வலைதளங்களில் வைரலானது.
கடந்த சில மாதங்களாக சாட்டிலைட், டிஜிட்டல் உரிமங்களை மிக குறைந்த விலைக்கு கேட்பது, தமிழ் சினிமா துறையினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. குறிப்பாக விஜய், ரஜினி, அஜீத் போன்ற பெரிய நடிகர்களின் படங்களையே முன்பை விட பாதி விலைக்கு சாட்டிலைட், டிஜிட்டல் உரிமம் கேட்பது தொடர்கிறது. ஆனாலும் இந்தி டப்பிங் உரிமத்தை பொருத்த வரை பழையபடியே விலை போகிறது.
ஆனால் தயாரிப்பாளர் எஸ் தாணு தயாரிப்பில் உருவாகி உள்ள ட்ரெயின் படம் இதுவரை டிஜிட்டில், சாட்டிலை உரிமம் விலைக்கு போகவில்லை. மேலும் இந்தி டப்பிங் ரைட்ஸ்சும் இன்னும் விலை போகவில்லை. வழக்கமாக எஸ் தாணு படங்களை இந்தி டப்பிங் ரைட்ஸ் வாங்கும் கோல்டு மைன் நிறுவனம் தரப்பில் இந்த முறை இன்னுமே அணுகாதது தயாரிப்பாளர் எஸ் தாணுவை அப்செட் அடைய செய்துள்ளது.
மேலும், ட்ரெயின் படத்துக்கு முதலில் போடப்பட்ட பட்ஜெட் 24 கோடி ரூபாய்தான். ஆனால் இப்போது தயாரிப்பு செலவு ரூ. 15 கோடி அதிகரித்து ரூ. 39 கோடியாக அதிகரித்துள்ளது. போட்ட பட்ஜெட்டில் ரூ. 15 கோடி எகிறி விட்டது. இந்தி டப்பிங் ரைட்ஸூம் இன்னும் விலை போகவில்லை என்ற அடுத்தடுத்த சிக்கல்களால் தயாரிப்பாளர் எஸ் தாணு கவலையில் உள்ளார்.
மேலும், இந்த படத்துக்காக டைரக்டர் மிஷ்கினுக்கு பேசப்பட்ட சம்பளம் ரூ. 3 கோடி. இதில் ஒரு கோடி ரூபாய் அட்வான்ஸ் தந்துள்ள நிலையில், ரூ. 2கோடி மட்டுமே அவரது சம்பளமாக உள்ளது. அதனால் டைரக்டர் சம்பளத்திலும் பிடிக்க முடியாத நிலையில், ரூ. 15 கோடி பட்ஜெட் அதிகரித்திருந்தாலும், விஜய் சேதுபதி நடித்துள்ள 50வது படம் மகாராஜா, பெரிய அளவில் வெற்றி பெற்றால், ட்ரெயின் படமும் பெரிய அளவில் வணிக ரீதியாக லாபமடையும் என்ற கணக்கு போட்டுக் கொண்டு இருக்கிறார் தயாரிப்பாளர் எஸ் தாணு.





