- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி, கமல், விஜய், அஜீத், நயன்தாரா, திரிஷா போன்ற டாப் ஸ்டார் நடிகர் நடிகைகளுக்காக வரும்...

ரஜினி, கமல், விஜய், அஜீத், நயன்தாரா, திரிஷா போன்ற டாப் ஸ்டார் நடிகர் நடிகைகளுக்காக வரும் 21ம் தேதி ஸ்பெஷல் மீட்டிங் – ஆனா இதெல்லாம் நடக்கற கதையாப்பா?

- Advertisement -

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு படத்தை தயாரித்து வௌியிட்டால், தியேட்டர்களில் அது ரிலீஸ் செய்யப்படுவதால் மட்டுமே தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைத்தது. படம் அதிக தியேட்டர்களில், அதிக நாட்கள் ஓடினால் பல லட்சங்கள் ரூபாய் லாபமாக கிடைத்தது. அதனால் தியேட்டர்கள் பெருகின. படங்களும் அதிகளவில் வெளியாகின.

ஆனால் கேபிள் டிவி சேனல்கள் அதிகரித்த பிறகு, சாட்டிலைட் உரிமம் என்ற பெயரில், தியேட்டர்களில் படங்களை ரிலீஸ் செய்கிற போது கிடைக்கிற அபரிமிதமான லாபத்தை போலவே, முன்னணி டிவி சேனல்கள் மூலம் சாட்டிலைட் உரிமம் வாயிலாகவும் கணிசமான லாபத்தை தயாரிப்பாளர்கள் பெற்று வருகின்றனர்.

இப்போது கடந்த சில ஆண்டுகளாக, ஓடிடி தளங்களின் வருகை அதிகரித்த பிறகு டிஜிட்டல் உரிமம் வாயிலாகவும், படங்களை தயாரித்து வெளியிடும் தயாரிப்பாளர்களுக்கு இன்னும் கணிசமாக லாபம் கிடைக்கிறது. இதுமட்டுமின்றி இந்தி ட்பபிங் ரைட்ஸ், மற்ற மொழிகளில், மற்ற நாடுகளில் வெளியிடும் ஓவர்சீஸ் உரிமம் வாயிலாகவும் கணிசமான லாபமடைகின்றனர்.

இப்படி தியேட்டர்களில் நேரடியாக வசூல், சாட்டிலைட் உரிமம், டிஜிட்டல் உரிமம், இந்தி டப்பிங் உரிமம், பிறமொழிகளில் வெளியீடு, ஓவர்சீஸ் உரிமம் என பல விதமான வழிகளில் எதிர்பார்த்ததை விட பலமடங்கு லாபம் அதிகரித்ததால், தயாரிப்பாளர்கள் மிக அதிக பட்ஜெட்டில் நூற்றுக்கணக்கான கோடிகளை முதலீடு செய்து பெரிய பட்ஜெட் படங்களை எடுத்தனர். நடிகர், நடிகைகளுக்கும் சம்பளத்தை நூற்றுக்கணக்கான கோடிகளில் வாரி வழங்கினர்.

இதனால் நடிகர்கள் அஜீத், விஜய், ரஜினி, கமல் சம்பளம் ரூ. 150 கோடி முதல் 200 கோடி ரூபாய் வரை அதிகரித்தது. இயக்குனர்கள் சம்பளமும் 50 கோடி, 60 கோடி என எகிறியது. நயன்தாரா, திரிஷா சம்பளமும் ஒரு படத்துக்கு ரூ. 10 கோடி, ரூ. 12 கோடி என அதிகரித்தது. ஆனால், கடந்த சில மாதங்களாக, சாட்டிலைட் உரிமம், டிஜிட்டல் உரிமத்தை அந்த நிறுவனங்கள் பாதியாக குறைத்து விட்டன. ஏனெனில், அதிக விலை கொடுத்து வாங்கிய படங்களை ஓடிடி தளங்களில் வெளியிட்ட வகையில், அவர்கள் கால்வாசி முதலீட்டை கூட திரும்ப பெற முடியவில்லை.

இதையடுத்து, ஓடிடி நிறுவனங்களின் டிஜிட்டல் ரைட்ஸ், சாட்டிலைட் உரிமம் விலை குறைந்ததால், தயாரிப்பாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர், நடிகைகள் சம்பளத்தை குறைப்பதற்கான ஆலோசனை கூட்டம் வரும் 21ம் தேதி நடக்கிறது. இதில் தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகள் கலந்துக்கொள்ள இருக்கின்றனர். ஆனால் ஏற்கனவே இதுபோன்ற நடிகர், நடிகைகள் சம்பளத்தை குறைப்பதற்காக நடத்தப்பட்ட கூட்டங்கள் பலவும் தோல்வியடைந்தன. பெரிய தயாரிப்பாளர்கள், இதற்கு ஒத்துழைப்பதில்லை என்பதே இதில் கசப்பான உண்மை.

சற்று முன்