- Advertisement -
Homeபொழுதுபோக்குத்ரிஷாவை தொட்டு தொட்டு விளையாடிய நடிகர்.. நடிகை பகிர்ந்த சீக்ரெட்.. இப்படியும் நடந்திருக்கா?

த்ரிஷாவை தொட்டு தொட்டு விளையாடிய நடிகர்.. நடிகை பகிர்ந்த சீக்ரெட்.. இப்படியும் நடந்திருக்கா?

- Advertisement -

கோலிவுட்டின் முன்னணி நடிகையாக இருப்பவர் த்ரிஷா. கோலிவுட் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் தனது நடிப்பாலும், அழகாலும் ரசிகர்களை கவர்ந்தவர். 20க்கும் மேற்பட்ட வருடங்கள் தொடர்ந்து லைம் லைட்டில் இருக்கிறார் த்ரிஷா. இடையில் சில காலம் வாய்ப்புகள் அவருக்கு குறைய ஆரம்பித்திருந்தன. இதன் காரணமாக த்ரிஷா ஃபீல்ட் அவுட் ஆகிவிட்டார் என கூறப்பட்டது.

ஆனால் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் அவர் ஏற்றிருந்த குந்தவை கதாபாத்திரம் பெரும் ஹிட்டடித்தது. மேலும் பல வருடங்கள் கழித்து த்ரிஷாவை மீண்டும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வர்ணிக்க தொடங்கினர். பொன்னியின் செல்வன் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக அவர் தற்போது தொடர்ந்து படங்களில் கமிட்டாகிவருகிறார்.

- Advertisement -

அந்தவகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படத்தில் நடித்திருக்கிறார். அடுத்ததாக அஜித் நடிக்கவிருக்கும் விடாமுயற்சி படத்திலும் த்ரிஷாவை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் கௌரவ் நாராயணன் இயக்கப்போகும் ஒரு படத்திலும் த்ரிஷா நடிக்கவிருக்கிறாராம்.

ஒரு பக்கம் முன்னணி ஹீரோக்களுக்கு மீண்டும் ஜோடி; மறுபக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடிப்பது என த்ரிஷா பிஸியாக இருக்கிறார். நயன் தாரா தனது குழந்தைகளை கவனித்துக்கொள்வதற்காக படங்களில் நடிப்பதை குறைத்துக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார். அதேபோல் தற்போது ஹீரோயின்களுக்கு தமிழ் சினிமாவில் பஞ்சமும் ஏற்பட்டிருக்கிறது. சொல்லப்போனால் நன்றாக நடிக்கும் நடிகைகள் ஐந்து பேருக்குள்தான் இருப்பார்கள். எனவே த்ரிஷா மீண்டும் நம்பர் 1 இடத்தை பிடித்திருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் த்ரிஷா நடித்த படம் ஒன்றில் அவருக்கு நடந்த சம்பவம் குறித்து நடிகை மீரா மிதுன் பேசியிருக்கிறார். அவர் கூறுகையில், “த்ரிஷா நடித்த ஒரு படத்தில் நான் சின்ன ரோலில் நடிப்பதற்கு கமிட்டாகியிருந்தேன். அந்தப் படத்தின் ஹீரோ பிரபலமானவர்தான். அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரின் முன்னாடியும் த்ரிஷாவை தொடக்கூடாத இடத்தில் தொட்டு விளையாடிக்கொண்டிருந்தார்.

அது த்ரிஷாவுக்கு பிடிக்கவில்லை என்றாலும். எதுவும் செய்ய முடியாமல் சகித்துக்கொண்டிருந்தார். ஏனென்றால் அந்த சமயத்தில் அவர் கோபப்பட்டிருந்தால் பட வாய்ப்பு பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் இருந்தார். முன்னணி நடிகைக்கே இந்த நிலைமை என்றால் என்னைப் போன்ற சாதாரண நடிகையின் நிலைமையை யோசித்து பாருங்கள்” என்றார். மீரா மிதுன் பகிர்ந்திருக்கும் இந்த விஷயம் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

- Advertisement -

சற்று முன்